பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஆரணிய காண்ட ஆய்வு

மலை, மரம், மயில், குயில், கலை, பிணை, களிறு, பிடி ஆகியவை நம்மைப்போல் பேசமாட்டா. இவற்றைப் போய்ப் பேசும்படிச் சொல்வது - அதாவது - இவை பேசுவது என்பது இயலாத செயல். பேசாதவை பேசுவது என்பது, அணி இலக்கணத்தில் சமாதி அணி எனவும், சொல் இலக்கணத்தில் விட்ட இலக்கணை எனவும் கூறப்

படும்.

கம்பர் பெருமான் பழைய இலக்கண - இலக்கியங்களை யெல்லாம் நன்கு படித்தவர் என்பது இப்பாடலால் புலனாகிறது. இது, தொல்காப்பியம் - செய்யுளியலில் கூறப்பட்டுள்ளது. அதாவது - காதலரைப் பிரிந்தவர்கள் அஃறிணைப் பொருள்களைப் பார்த்து, சொல்லுவன போலவும் கேட்பன போலவும் கற்பனை செய்து கொண்டு கூறுவர்.

“ஞாயிறு திங்கள் அறிவே நானே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுதலிய நெறியால் சொல்லுரு போலவும் கேட்குங் போலவும் சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்” (122)

இவற்றிற்கு இலக்கிய அகச் சான்றுகள் சில வருமாறு: ஞாயிறு - கலித்தொகையில்:

"பழிதபு ஞாயிறே பாடறியா தார்கண்

கழியக் கதழ்வை எனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவன்...' (143:22, 23, 24) திங்கள் - திருக்குறளில்:

“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி’ (1118)