பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 229

இதைக் கேட்டுக்கொண்ருடிந்த அரக்கன், உம்மவரால் அரக்கர்களை வெல்ல முடியுமா எனக் கைகொட்டி ஏளனமாகச் சிரித்தான். அங்ஙனமாயின் போர் புரியாமல் வஞ்சகமாய் என்னை எடுத்து வந்தது ஏன்? அச்சத்தினால் தானே இவ்வாறு செய்தாய் என்றாள்:

கேட்டும் இம்மாயம் செய்தது அச்சத்தின்

கிளர்ச்சியன்றோ (84) கேட்ட இராவணன், மானிடருடன் போர் புரிவது, சிவனது மலையை எடுத்த என் தோள்வலிமைக்குப் பழி உண்டாகும். அப்பழியை விட, இந்த வஞ்சகம் மேல் என்றான்:

'விழிதரும் நெற்றியான்தன் வெள்ளி வெற்பெடுத்த தோட்குப் பழிதரும்; அதனின் சாலப் பயன்தரும்

வஞ்சம் என்றாள்” (85) சீதை மேன்மேலும் இழித்துரைத்தாள்.

அடா கில் கில்!

சீதையும் இராவணனும் இவ்வாறு வாதிட்டுக் கொண்டிருக்கையில், இவர்களை வழியில் பார்த்து விட்ட கழுகு அரசனும் தயரதனின் நண்பனு மாகிய சடாயு, மேலெழுந்து இராவணனை நோக்கி, எங்கே அடா எடுத்துச் செல்கிறாய்! போகாதே - நில் நில் என்று கூறித் தடுக்க முயன்றான்: அவன் கண்கள் நெருப்பை வீசின; மின்னலைப் போல் அலகு பளபளத்தது; மேருமலை மேலெழுந்தது போன்ற தோற்றத்தினனானான்:

“என்னும் அவ்வேலையின்கண்

எங்கடா போவதெங்கே கில் கில் என்றிடித்த சொல்லன்

நெருப்பிடைப் பரப்பும் கண்ணன்