பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ) ஆரணிய காண்ட ஆய்வு

இவ்வாறு பாடுவது, கருத்து வெளிப்பாட்டில் ஒரு புதுமைச் சுவையாகும். வள்ளுவர் இதில் மிகவும் வல்லவர். கம்பருங் கூடத்தான்....!

இரும்பு உண்ட நீர்

இவ்வாறு சடாயு பல அறிவுரைகள் கூறிச் சீதையை விடுவிக்குமாறு அறிவுறுத்தினான். அதற்கு இராவணன், காய்ச்சிய இரும்பில் பட்ட நீர் ஒடுங்கிவிடும் . அவ்வாறு ஒடுங்காமல் அந்த நீர் வெளியே திரும்ப வருமாயினும் என்னிடம் அகப்பட்ட சீதை மீளாள் - என்றான்: "இரும்பு உண்டநீர் மீள்கினும் என்னுழையின்

கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால்” (104)

காய்ச்சிய இரும்பில் பட்ட நீர் உள்ளே அடங்கிவிடும் என்ற செய்தி முன்னொரு பாடலிலும் விளக்கம் பெற்றுள்ளது. கரும்பு உண்ட சொல் = கரும்பு போன்ற இனிமையைக் கொண்டுள்ள பேச்சு. இங்கே, சொல் என்பது சொல் பேசும் சீதையைக் குறிக்கிறது. இது ஆகுபெயர்.

இராவணன் படைக் கருவிகளாலும், சடாயு இறக்கை அலகு கால் நகங்கள் ஆகியவற்றாலும் ஒருவர்க்கு ஒருவர் மோதிக் கடும்போர் புரிந்தனர்.

மீண்டது வேல்

இராவணன் முத்தலை கொண்ட சூலம் என்னும் மூவிலை வேலைச் சடாயுவின் மார்பில் எறிந்தான். அவ்வேல் சடாயுவின் மார்பைத் துளைக்க முடியாமல் மீண்டதாம். வேல் மீண்டதற்கு மூன்று உவமைகள் கூறிக் கம்பர் கவிச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புப் பெயருக்கு மேலும் மெருகு கொடுத்துள்ளார். அவையாவன: