பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 I) ஆரணிய காண்ட ஆய்வு

'பின்னவன் உரையினை மறுத்துப் பேதேயேன்

அன்னவன் தனைக் கடிது அகற்றினேன், பொரு மன்னவன் சிறை அற, மயங்கினேன், விதி இன்னமும் என் வினை இயற்று மோ என” (132) பின்னவன் - இராமானுஜன் = இலக்குவன். அனு = பின். இராமனுக்குப் பின் பிறந்த தம்பி. பொரு மன்னவன் = சடாயு. சீதை தன் பிழையையும் நொந்து கொண்டு விதியையும் துணைக்கு அழைக்கிறாள்.

மேலும் கூறுவாள்: அஞ்சாதே என்று கூறி என்னைக் காக்க வந்தவன் தோற்பதா? நரகனாகிய இராவணன் வெல்வதா? ஒருவேளை, தீவினை தான் வெல்லுமோ மறை பொய்க்குமோ - அறம் இல்லையோ?

'அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இங்

நல்லவன் தோற்பதோ நரகன் வெல் வதோ வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்” (133) இப்போதைக்குச் சீதை இவ்வாறு கூறினும், இறுதியில் நரகனாகிய அரக்கனோ - பாவமோ வெல்ல முடியாது. வேதம் பொய்க்காது - அறம் தோற்காது, தீமை முதலில் நல்லதுபோல் தோன்றினும் பிறகு அழியும் என்பது முடிந்த முடிபு, இதனை,

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்’ (283) என்னும் குறட்பாவும், பாரதியார் பாஞ்சாலி சபதம் என்னும் நூலில் கூறியுள்ள.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை'

என்னும் பாடல் பகுதியும் வலியுறுத்துவதை அறியலாம்.

தொடக்கத்தில் நிரம்பக் கையூட்டு (இலஞ்சம்) பெற்று