பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 ) ஆரணிய காண்ட ஆய்வு

இந்திரனுக்கு அடங்காதவர்கள் அரக்கர்கள். அவர்கள் கருநிறத்தராதலின் கரிய இருளுக்கு உவமையாக்கப் பட்டனர்.

ஊற்றம் = வலிமை, எழுச்சி. இரவு துன்பத்திற்கு வலிமை தருவதாம். அதாவது - காதலரைப் பிரிந்தவர்க்கு இரவு மிகவும் வேதனை தருமாம். இராமனும் இனி அத்தகைய வேதனையை அடையப் போகிறான்.

பொதுவாக, இரவில், கள்ளரால் அச்சம், பாம்பு, புலி முதலியவற்றால் அச்சம் - இவ்வாறு பல வகை அச்சத்தால் இரவு வேதனைக்கு உரியதாகிறது. மற்றும், பிணியுற்றவர்க்கு இரவிலே பிணி மிகவும் தொல்லை தருவதாகச் சொல்வதுண்டு.

இரவு தொல்லையான தாதலால், இரவு கழிந்து ஞாயிறு தோன்றும் காலை நேரம் மக்கட்கு மகிழ்வு தருகிறது. இதனை, நக்கீரரின் திருமுருகாற்றுப்படை நூலின் முகப்பில் உள்ள

'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு (1, 2)

என்னும் பாடல் பகுதியும் உணர்த்துகிறது. மிக்க ஆற்றல் வாய்ந்த மின் விளக்குகள் எரியும் இந்தக் காலத்தினும், விளக்கெண்ணெய் விளக்கு எரிந்த அந்தக் காலத்தில் கொடிய விலங்குகட்கு அஞ்சி, அவற்றை அணுக முடியாத வண்ணம் அச்சுறுத்தி ஒட்டுவதற்காக நெருப்பு கொளுத்திக் காட்டிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், ஞாயிறு தோன்றியதும் உலகம் உவகை எய்தியது என்பது மிகவும்

இயற்கையான கருத்து வெளிப்பாடாகும்.

விரி இருள் வீங்கிற்று என்பது, இரவுப் பொழுது விரைவில் முடியாமல், உரிய காலத்திற்கு மேல் நீண்டு

கொண்டிருந்தது என்று கூறும் ஒரு கற்பனையாகும்,