பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 259

சிறை இட்டனனே

ஒருவேளை, இராவணன், ஞாயிற்றானையும் சிறையில் இட்டனனோ எனப் புலம்புகிறான் இராமன்:

"கட்டிவாள் அரக்கன் கதிரோனையும்

இட்டனன் கொல் இருஞ்சிறை என்னுமால்' (22) கதிரோன் = ஞாயிறு. சீதையையும் பலதேவர்களையும் சிறையிட்டதல்லாமல் கதிரோனையும் சினற இட்டனனோ என்னும் பொருள் தோன்றச் செய்தலின், கதிரோனையும்’ என்பதில் உள்ள உம் இறந்தது தழுவிய எச்ச உம்மை யாகும்.

சிலம்பும் - சிலம்பும்

அலை ஒலிக்கும் பாற்கடலை விட்டு, வண்டு ஒலிக்கும் மலர் அணிந்த கற்புக் கடலாகிய சீதையின் நினைப்பிலே ஆழ்ந்திருக்கும் இராமனுக்கு, பொழுது புலரும் வேளை நெருங்கப் பறவைகள் ஒலிக்கும் - பொழில்கள் ஒலிக்கும் - நீரும் ஒலிக்கும். ஆனால், இனி அவனுடைய அம்புகள் ஒலித்து எய்யப்படாவேல், இராமனுக்கு உயிர் நிலைப்பதரிது:

வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும் கள்ளும் சிலம்பு பூங்கோதை

கற்பின் கடலில் படிவார்க்குப் புள்ளும் சிலம்பும் பொழில் சிலம்பும் - புனலும் சிலம்பும் புனைகோலம்

உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர்

உண்டாகும் வகை உண்டோ” (28) சிலம்புதல் - ஒலித்தல், அளி = வண்டு; கள் = வண்டு. நான்காம் அடியில் உள்ள. சிலம்பும் என்பதனைச் சில் அம்பும் எனப் பிரித்துக் கொள்ளல் வேண்டும்.