பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 265

"எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு (470)

என்னும் குறட்பா ஒப்பு நோக்கத் தக்கது.

முன்னவனாய்ப் பிறப்பான்

நல்லூழ் இருக்குமாயின், தம்பி மீண்டும் பிறவி எடுப்பானாயின், எனக்கு அவன் அண்ணனாகப் பிறக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே வாளை எடுத்துத் தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றான்:

'அறப்பால் உளதேல் அவன் முன்னவனாய்ப்

பிறப்பான் உறின் வந்து பிறக்க எனா மறப்பால் மடிவாள் கொடு மன் உயிரைத் துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய்” (77) அடுத்த பிறவியில் இலக்குவன் அண்ணனாகப் பிறக்க வேண்டுமெனில், அடுத்த பிறவியில் இராமன் தம்பியாகப் பிறப்பான் என்பதுதானே போதரும்.

இதற்குப் பொருத்தமாகக் கதை சொல்லப்படுகிறது: அடுத்த கிருட்ணாவதாரத்தில், இராமன் கிருட்ணனாகவும், இலக்குவன் கிருட்ணனின் அண்ணனாகிய பலராமனாகவும் பிறந்தார்களாம்.

அதாவது, இலக்குவன் இப்பிறவியில் தம்பியாக இருந்து அண்ணனாகிய தனக்குக் தொண்டு செய்தல் போலவே, மறுபிறவியில், நான் அவனுக்குத் தம்பியாக இருந்து தொண்டு செய்ய வேண்டும் என்று கூறியதாகக் கருத்து கொள்ளல் வேண்டும்.

இராமன் வாளால் தற்கொலை செய்துகொள்ள முயன்றானாம். இது அளவு மீறிய விரைவுச் செயலாகும். அவசரப்பட்ட முடிபாகும் அல்லவா?