பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 0 ஆரணிய காண்ட ஆய்வு

மூக்கரிவு

இந்த நேரத்தில், இலக்குவன் தன் மெய்யுணர்வால் அயோமுகியின் பிடியிலிருந்து விடுபட்டு, அவரது மூக்கை

அரிந்தான். அதனால் அவள் அலறிய ஓசை இராமனுக்குக் கேட்டது:

பேர்த்தான் நெடு மாயையினிற் பிரியா

ஈர்த்தான் அவள் நாசி பிடித்து இளையோன் சோர்ந்தாள் இடுபூசல் செவித் துளையில் சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா' (78)

சூர்ப்பணகையின் மூக்கை அரிந்த கத்தி இப்போதும் வேலை செய்திருக்கிறது. அயோமுகி அரற்றிய ஒலி திருமாலாகிய இராமனின் செவிக்குள் புகுந்தது.

தண்ணிருக்குப் போன இடத்தில் நிகழ்ந்த இந்தக் காதல் காட்சி போன்ற ஒன்று, சிலப்பதிகாரம் - காடுகாண் காதையிலும் இடம் பெற்றுள்ளது.

கோவலன் காட்டு வழியில் கவுந்தியையும் கண்ணகியையும் ஒரு பால் இருக்கச் செய்து தண்ணிர் கொணரச் சென்றஇடத்தில், அக் காடுறை தெய்வம் வயந்த மாலையின் வடிவில் வந்து கோவலனை மயக்கிற்று, கோவலன் உடனே

பாவை (கொற்றவை) மந்திரத்தை உருவேற்றியதும் அத்தெய்வம் போய்விட்டது.

இராமாயணக் கதையில், காதல் கொண்டவள் அரக்கி யாதலாலும் காதல் கொள்ளப்பட்டவன் அரச குமாரன் ஆதலாலும் மூக்கரியும் திருப்பணி நடைபெற்றது. சிலம்பில், காதல் கொண்டது காடுறை சிறு தெய்வ. மாதலாலும் காதல் கொள்ளப் பட்டவன் எளிய குடிமகனாகிய கோவலனாதலாலும் மூக்கரியும் திருப்பணி நடைபெற வில்லை.