பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 287

ஒலி வந்த பக்கம் நோக்கி இராமன் விரைந்து சென்றான். இலக்குவனைக் கண்டதும், இழந்த கண்ணை மீண்டும் பெற்றாற் போன்ற மகிழ்ச்சி எய்தினான்.

சிந்திய கண்

"சிந்திய நயனம் வந்தனைய செய்கையான்' (83)

என்பது பாடல் பகுதி. விசுவாமித்திரன் தயரதனிடம் வந்து இராமனை அனுப்பும் படிக் கேட்டபோது, தயரதன், கண் இல்லாதவன் கண்ணைப் பெற்று மீண்டும் இழந்தாற் போன்ற துன்பம் எய்தினானாம்:

'கண்ணிலான் பெற்று இழந்தா லென உழந்தான்

கடுந்துயரம் கால வேலரன்’

எனக் கம்பரே அயோத்தியா காண்டத்தில் பாடியுள்ளார். இங்கே, இராமன் பெற்ற கண்ணை இழந்து மீண்டும் பெற்றவன் போல் ஆனான் எனக் கூறியுள்ளார்.

பால் பிலிற்றும் ஆ

கண்ணிர் ஒழுக இராமன் கனிவுற்று, கன்றினைப் பிரிந்த பசு மீண்டும் கன்றைப் பெற்றது போன்ற மகிழ்வெய்தினான்:

'ஊற்றுறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்

ஏற்றிளங் கன்றினைப் பிரிவுற்று ஏங்கி நின்று ஆற்றலது அரற்றுவது அரிதின் எய்திடப் பால்துறும் பனிமுலை ஆவின் பான்மையான்" (84) ஆற்றலது = பிரிவைத் தாங்க முடியாதது. அரற்றுவது க கதறுவது. அரிதின் எய்திடல் - எப்படியோ அரிதாக வந்து சேர்தல் பால்துறும் பனிமுலை = பால் பீய்ச்சும் காம்பு மடி.

இலக்குவனைப் பிரிந்த இராமனுக்கு, கன்றைப் பிரிந்த பசு ஒப்புமை யாக்கப்பட்டுள்ளது. பசு அடைந்த துயரத்தினும்