பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 () ஆரணிய காண்ட ஆய்வு

'கண் அஞ்சனத்தர் கருணைக் கடலினர் உள்கின்று உருக்குவர் அன்னே என்னும் உள்கின்று உருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணிர் தருவரால் அன்னே என்னும்” (2)

என்பது பாடல் பகுதி, உலப்பிலா = அழியாத, ஆனந்தக் கண்ணிர்=மகிழ்ச்சிக் கண்ணிர்.

கம்பர் பாடலில் உள்ள அழுதான்' என்பதும் இத்தகைய மகிழ்ச்சிக் கண்ணிரையே குறிக்கிறது.

நாற்பது ஆண்டுகட்கு முன் கடலூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகன் ஒலி பெருக்கியின் முன்நின்று கொண்டு நன்றி கூறத் தொடங்கியபோது, தந்தையை இழந்த தம்மை வளர்த்துக் கல்வி கற்பித்து ஆளாக்கிய பெரியார் ஒருவர்க்கு அழுது கொண்டே நன்றி கூறினார். இது மகிழ்ச்சிக் கண்ணிர் என்று அவரே கூறிவிட்டார்.

பின்னர் இராமன், சீதை, இலக்குமணன் ஆகிய மூவரையும் முனிவன் அழைக்க, அவர்கள் முனிவனின் குடிலுக்குச் சென்றனர். முனிவன் இராமனுக்குப் பல நல்லுரைகளைக் கூற இருவரும் அளவளாவி யிருந்தனர். ஒரு விதமாக அன்றைய நாள் கழிந்தது.

ஞாயிறு தோற்றம்

மறுநாள் காலை ஞாயிறு தோன்றியதைக் கம்பர் பின்வருமாறு உருவகித்துள்ளார். அதாவது, தனது கதிராகிய கையினால், உலகைப் போர்த்தி மூடிக்கொண் டிருந்த இருளாகிய போர்வையை அகற்றினானாம்:

'அலகிடல் அரியதன் அவிர்கர கிரையால்

உலகிடு கிறைஇருள் உறையினை உரிவான்” (36)