பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர் சண்முகனார் ( 49

ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்கள் அந்தணர்கட்கு உண்டு. இதனால் இவர்கள் அறு தொழிலோர் எனப்படுவர்.

'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்” (560) என்னும் திருக்குறள் பகுதியாலும் இதனை அறியலாம். இங்கே மறைகள் ஓதல், ஒதுவார்க்கு உதவலாகிய ஒது வித்தல், எரி வளர்த்தல் (வேள்வி புரிதல்) என்னும் மூன்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அறு (ஆறு) தொழில் களுள் இவை மூன்றும் இன்றியமையாதவை. இம் மூன்றனுள்ளும் வேதம் ஒதுதல் மிகவும் இன்றியமையாதது. இதனால்தான் 'மறப்பினும் ஒத்துக் கொளலாகும்’ என்றார் திருவள்ளுவர். ஒத்து = வேதம். மறப்பினும் என்பதில் உள்ள 'உம்' என்பது, மறக்கக்கூடாது என்பதைக் குறிப்பாய் அறிவிக்கிறது. வேதம் ஒதுவதால் வேதியர்' என்னும் பெயர் அந்தணர்க்கு உண்டு.

மறைகள் (வேதங்கள்) நான்கு அவற்றுள் ஒன்று அல்லது இரண்டைக் கூட ஒத முடியவில்லை என்பார் 'மறைகள் யாவையும் ஒதலெம் என்றார்.

இந்தத் தொழில்களை முறையே செய்பவரே அந்தணராவர் - யாங்கள் செய்யவில்லை யாதலின், அந்தணர் என்னும் தகுதிக்கு உரியரல்லர் என்றனர்.

பழைய செய்தி ஒன்று நினைவிற்கு வருகின்றது. திருப்பராய்த் துறை - தபோவனத் தலைமைத் துறவியா யிருந்த காலஞ் சென்ற தவத்திரு சித்ப வானந்தா அடிகளார், புதுச்சேரி வேத புரீசுவரர் நூல் நிலைய ஆண்டு விழாவிற்கு ஒருமுறை தலைமை தாங்கி உரையாற்று கையில் பின்வருமாறு ஒரு கருத்து தெரிவித்தார்: