பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 63

இமைப்பிலர் = இமைக்காத தேவர்கள். பேச்சு-மூச்சு காட்டாதே எனச் சிலர் யாரையாவது கடிவது உண்டு - தவசிகள் இப்போதுதான் மூச்சு காட்டத் தொடங்கினராம். அந்தணர்கள் அரக்கரால் அறுப்புண்ட பூணுரலை மீண்டும் அணிந்து உண்மையான அந்தணரானார்களாம். அரக்கரின் விடவேர் முதல் அறுக்கப்படுமாம். விடவேர் = நச்சுவேர். வேர் முதல் = வேரின் கடைசி அடிவேர். (பூண்டோடு அறுத்தல் - வேரோடு அழித்தல் என இரு சொற்களால் குறிக்க படுவதை, ஆங்கிலத்தில் Extirpate என்னும் ஒரே சொல் குறிக்கிறது) அறுப்பான் = அறுக்க: இது பான்’ விகுதி ஏற்ற வினையெச்சம், வலிப்பான் = உறுதியாக நம்பினான் அகத்தியன்.

அடிவேரை - ஆணிவேரை - சல்லிவேரை அறுக்கும் மருந்து உண்டா என்றால் உண்டு. என் மாமனார் வீட்டுத். தோட்டத்தில் இரண்டு எலுமிச்சைச் செடிகள் பல ஆண்டு களாக நன்றாய்க் காய்த்துக் கொண்டிருந்தன. மரம் செடிகளை மருந்து போட்டு நன்றாக-மிகுதியாகக் காய்க்கச் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வந்து நிரம்பக் காசு பெற்றுக் கொண்டு செடிகளின் அடியில் மருந்து போட்டான். இரண்டே திங்களில் இரு செடிகளும் முற்றும் பட்டுப் போயின. இவன் வேர் அறுக்கும் மருத்துவன்.

காவிரி கொணர்ந்தான்

காவிரியைக் கொண்டு வந்தவனாகிய அகத்தியன், இராமனைக் கண்டதும், தாமரை மலர் போன்ற கண்களி லிருந்து நீர் பொழிய நின்றான்.

'கண்டனன் இராமன் வரக் கருணை கூரப்

புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய கின்றான் எண்திசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக் குண்டிகையினிற் பொருவில் காவிரி கொணர்ந்தான்'(46)