பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 0 ஆரணிய காண்ட ஆய்வு

"கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாஅது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை’ (பதிகம்-10, 11,12) இது மணிமேகலைக் காப்பியம்,

“கன குடகில் கின்ற குன்றம் தருசங்கரன் குறுமுனி

கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய் நதி' (926) அருணகிரி நாதரின் திருப்புகழ்ப் பாடல் இது.

காவிரியை ஒரு சோழன் கொண்டு வந்ததாக அபிதான சிந்தாமணி நூலிலும் கலிங்கத்துப் பரணியிலும் கூறப் பட்டுள்ளது.

“காலனுக்கு இது வழக்கென உரைத்த அவனும்

காவிரிப் புனல் கொணர்ந்த அவனும்...” (192)

இது கலிங்கத்துப் பரணி

காவிரிக்கு உரிமை கொண்டாடுபவர்கள், எண் திசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக் காவிரி கொணர்ந்தான்’ என்னும் கம்பரின் பாடல் பகுதியை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும்.

என்றும் உளதென் தமிழ்

நீர் பொழிய நின்ற அகத்தியனது திருவடிகளை வந்த இராமன் பணிந்தான். அகத்தியன் அன்போடும் அழுத கண்ணோடும் இராமனைத் தழுவி, வரவு நல்வரவாகுக என்று தொடங்கிப் பல நல்ல வாழ்த்துரைகள் கூறினான். 'கின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணான் நன்றுவரவு என்று பல நல்லுரை பகர்ந்தான் - என்றும் உளதென்தமிழ் இயம்பி இசை கொண்டான்' (47)