பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆசிரியர் கருத்துரை

 கம்பரின் பால காண்டம், அயோத்தியா காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என்னும் நான்கு காண்டங்கட்கும் இதற்குமுன் திறனாய்வு எழுதியுள்ளேன் - அவற்றை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஊக்குவிப்பு

நான்கு நூல்கட்கும் நேரிலும் மடல் வாயிலாகவும் பெரிய பாராட்டு கிடைத்தது. கம்ப ராமாயணத்தின் மற்ற காண்டங்கட்கும் திறனாய்வு எழுதுமாறு அன்பர்கள் பணித்தார்கள். எனவே, இப்போது இந்த 'ஆரணிய காண்ட ஆய்வு என்னும் நூலை எழுதியுள்ளேன். திறனாய்வு இப்படித்தான் இருக்கவேண்டும் என எவரும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. தமிழ் எம். ஏ. தேர்வுக்கு யான் படித்தபோது, விருப்பப் பாடமாக 'இலக்கியத் திறனாய்வு' என்னும் பாடத்தைத்தான் எடுத்துக் கொண்டேன். திறனாய்வு பற்றிய சில நூல்களை யான் படித்துள்ளேன். இங்கே என்னால் இயன்றதைச் செய்துள்ளேன்.

கம்ப ராமாயணப் பதிப்புகள்

கம்ப ராமாயண ஒலைச் சுவடிகள் இருநூற்றுக்கும் மேல் உள்ளன. இந்நூலைப் பலர் பதிப்பித்துள்ளனர். பதிப்புக்குப் பதிப்பு வேறுபாடுகள் உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில், முதலில் சொற்கனைப் பிரிக்காத பாடல் வடிவமும் அதையடுத்துச் சொற்களைப் பிரித்த