பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 0 ஆரணிய காண்ட ஆய்வு

பரவல் அரும் = புகழ்தற்கு அரிய, கரவல் அரும் = மறைத்தல் இல்லாத. உடுபதி = திங்கள். உடு - விண்மீன். வீண்மீன்களின் தலைவன் திங்கள் என்ற விளக்கம் வேறு காண்டங்களிலும் இடம் பெற்றுள்ளது. கடல் இடம்= கடல் சூழ்ந்த நிலம் (பூமி). பொறைக்குச் சிறந்தது நிலம் என்பதை,

“அகழ்வாரைத் தாங்கும் கிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ (151) என்னும் குறளாலும் அறியலாம். அத்தகைய நிலமே தயரதனின் பொறைக்குத் (பொறுமைக்குத்) தோற்றதாம்.

தயரதனின் பொறுமைக்கு ஒரு சான்று வேண்டுமே. இராமனது பிட்டத்தைப்பறித்துக் காடேகச் செய்த ஒன்றைப் பொறுத்துக் கொண்ட பொறுமையே போதாதா? வேறு ஒருவராயிருந்தால், கைகேயி கூறுவதை ஏ ற் று க் கொள்ள்மல், அவளை நையப் புடைத்துத் தாக்கி எறிந்திருப்பர் தயரதனோ பொறுத்துக் கொண்டான்.

பொய்க்குப் பகைவன்-மெய்க்கு அணியானவன் அதாவது பொய்யாமை உடையவன்; அதனால் புகழ் பெற்றான்.

'பொய்யாமை அன்ன புகழில்லை’

என்னும் குறள் ஈண்டு எண்ணத் தக்கது.

புரவலன் போய் விட்டதால் இரவலர் வருந்துகின்றனர். அறநெறி மன்னன் இறந்து விட்டதால் இனி அறநெறிக்கு நெருக்கடி நேரும். நண்பன் இறந்தது சடாயுவுக்கு

வருததமாம.

கம்பர் இந்தப் பாடலிலே ஒரு புதுமையைக் கையாண்டு உள்ளார். சிறந்த அழகிய பெண் ஒருத்தியின் நடைக்கு அன்னமும், கைக்குச் காந்தளும், இடைக்குக் கொடியும், கொங்கைக்குக் கோங்கரும்பும், உதட்டுக்குக் கொவ்வைக்கனி