பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பதிகளின் சுதந்திரத்திற்குக் கேடு விளையும். நீதிபதிகளின் நியமன விஷயத்தில் கட்சி உணர்ச்சியும் தாகூகிண்யமும் அதிகரித்து வீண் சண்டையும் ரகசியக் கலகங்களும் ஏற்படக் கூடும். வேருெரு முறை பல நாடுகளில் இன்னும் சோதனை நிலையில் இருந்துவருகிறது. அங்கே நீதிபதிகள் பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிருர்கள். இப்போது ஸோவியத் ருஷ்யாவில் மாத்திரமே இம்முற்ை அனுஷ்டா னத்தில் இருந்து வருகிறது. இதில் ஒரு முக்கியமான குறை உண்டு. நீதிபதிகள் திறமையற்றவர்களாகவும் நேர். மையில்லாதவர்களாகவும் ஆகிவிடுவார்கள். நீதிமன்றங் களுக்கு வேண்டிய திறமைபெற்றவர் சாதாரணமாய் அர சியல் சம்பந்தமான போட்டிப் போராட்டங்களில் கலந்து கொள்ளப் பின்வாங்குவார்கள். நல்ல யோக்கியதை உள்ள வாகளே மாத்திரமே தேர்ந்தெடுக்கும்படியான பகுத்தறிவு வாக்காளர்களுக்கு இருப்பதில்லை. ஆதலின் தேர்தல்களின் மூலம் அரசியல் வாதிகளே நீதிபதிகளாக வந்துவிட்டால் அரசியல் ஸ்தாபனத்திற்கும் நீதி ஸ்தாபனத்திற்கும் நேரான தொடர்பு ஏற்பட்டு விடும். இது தீமையையே விளைவிக்கும். சாதாரணமாய்ப் பல நாடுகளில் நீதிமந்திரியின் சிபாரி சின்மேல் அரசாங்கத் தலைவரே நீதிபதிகளே நியமனம் செய்கிருர் சட்ட சபையையும் பொதுஜனங்களையும் விட நிர்வாக அதிகாரிகளே நீதிபரிபாலனத்திற்கு வேண்டிய திறமை படைத்தவர்களைப் பொறுக்கி யெடுக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்ற காரணத் தில்ை இம்முறையைப் பலர் ஆதரிக்கின்றனர். இப்படி நியமனம் செய்யப்பெற்ற திே பதிகள் பெரும்பாலும் பொதுமக்களின் அபிப்பிராயத்திற் குப் பயப்படாமலும் கட்சி தாகூதிண்யத்திற்கு உட்படாம லும் அரசியற் காரணங்களுக்குச் செவி சாய்க்காமலும் நீதி செலுத்திவரக் கூடும். .இவ்விஷயத்தில் அரசியல் ஞானிகள் பலரின் அபிப்பிரா யம் வருமாறு : ஒரு நீதிமன்ற்த்திலுள்ள சுதந்திரம்பெற்ற நீதிபதிகளோ, அல்லது உயர்தர நீதிபதிகளோ, காட்டில் நீதிபதி ஸ்தானத்திற்குத் தக்க யோக்கியதை யுள்ளவர்களைப் - 90