பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை உலகிலுள்ள நாடுகளில் ஒவ்வொன்றிலும் ஜன சமு தாயத்தினர் ஒவ்வோர் அரசுக்கு உட்பட்டு வாழ்கிருர்கள். அவ்வரசுகளின் செயல்களும் கட்டுப்பாடுகளும் வெவ்வேறு வகையாக இருக்கின்றன. மிகப் பெரிய வல்லரசுகளில் ஒரு மனிதனே அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறதாகத் தோற்று கிறது. ஆனால், அப்படித் தலைமை பூணும் மனிதர்களுக்குள் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. ருஷ்ய தேசத் தலே வர் ஒருவரே, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் தலைவர் ஒரு வரே, ஆளுல், இவ்விரண்டு தலைவர்களின் நிலைக்கும், அதி. காரங்களுக்கும் அரசாங்கத்தில் அவர்களுடைய தொடர்புக் கும் பலவகையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இப்படியே வேறு காட்டுத் தலைவர்களுக்கு மிடையே வேற்றுமை உண்டு. - - பிரஜைகளுக்கும், அரசியல் தலைவருக்கும், அரசாங்கத் துக்கும் எவ்வகையான தொடர்பு இருக்கிறது? ஒவ்வொரு தேசத்திலும் குடிமக்களுக்கு அரசியலில் எத்தகைய செல் வாக்கு இருக்கிறது ?-இத்தகைய விஷயங்களே ஒவ்வொரு பிரஜையும் அறிந்துகொள்வது கலம். . . . . . . . கம் காட்டில் இப்போது அரசியலில் மக்களுக்கு மிக்க ஊக்கம் உண்டாகியிருக்கிறது. அரசியல் சம்பந்தமான விஷ யங்களை அறிந்தோ, அறியாமலோ அரசியலின் சம்பந்தம் வேண்டுமென்ற உற்சாகம் பலருக்கு இருந்து வருகிறது. ஜனநாயகம் ப்ரவிவரும் இக்காலத்தில் ஒவ்வொரு பிரஜை யும் ஜனநாயக அரசின் இன்றியமையாத உறுப்பினன் ஆவான். தன் கிலேயையும் உரிமையையும் அவன் உணர்ந்து கொண்டால், அரசியல் சம்பந்தமாக அவன் செய்யவேண் டியவற்றைச் சரிவரச் செய்து வாழ முடியும். அதல்ை நாடு முழுவதும் இன்ப வாழ்வு பெற ஏதுவாகும். ஆகவே இப்போது அரசு, அரசாங்கம், பிரஜைத் தன்மை முதலியவற்றைப்பற்றிய செய்திகளை அரசியலில் பங்கு கொண்டவர்களும், நிர்வாக அதிகாரிகளும் கன்ருகத்