பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தல ஸ்தாபன ஆட்சி தற்கும், தேசிய ஒற்றுமையும் தேசிய முன்னேற்றமும் ஏற் படுவதற்கும் அடிகோலுவார்கள். - ஸ்தல் ஸ்தாபன சுய ஆட்சியில் பின்னும் உயர்ந்த விசே ஷம் ஒன்று உண்டு. ஸ்தல சுயஆட்சி ஸ்தாபனம் ஜன சமூ கத்திற்கு வேண்டிய பொறுப்புணர்ச்சியையும் நேர்மையை யும் உண்டுபண்ணுவதற்கேற்ற பயிற்சி ஸ்தலமாக இருக் கிறது. ஆதிகாலத்துக் கிரேக்க இத்தாலிய நகரங்களிலும் புராதன இந்தியக் கிராமங்களிலும் நிலவிய வாழ்க்கையின் சிறப்புக் காரணம், ஒரே இடத்தில் வசித்து வந்தவர்களுக் குள் தழைத்து வள்ர்ந்துவங்த சமுதாய வாழ்க்கையுணர்ச்சி யின் பலமே. தேசியத் தலைவர்களும், வீரர்களும் ஸ்தலஸ்தா பன ஆட்சியில்தான் முதல் முதல் முளைத்து எழுந்து பக்குவம் அடைகிருர்கள். ஸ்தலப் பிரச்னைகளில் ஈடுபடுவதல்ை நிர் வாகத்தைப்பற்றிய நேரான அனுபவமும் பயிற்சியும் அவர்க ளுக்கு முதலில் ஏற்படுகின்றன. பிற்காலத்தில் தேசிய ஆர் வம் அதிகரித்து ராஜீய விஷயங்களில் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கு ஸ்தல சுய ஆட்சியில் ஏற்பட்ட அனு பவம் மிகவும் துணேயாயிருக்கிறது. பிரோஸ் ஷா மேத்தா, டாக்டர் டி. எம். நாயர் முதலிய இந்தியத் தலைவர்கள் ஆதி யில் ஸ்தல ஸ்தாபன சுயஆட்சியில் ஆழ்ந்த பழக்கமும் அனு பவமும் பெற்றிருந்ததால்தான் பின்பு சிறந்த தேசீயத் தலை வர்களாக விளங்க முடிந்தது. இம்மாதிரியான அதிகாரத்தைச் சிறு ஸ்தாபனங்களுக் கும் பகிர்ந்து விகியோகம் செய்வதுதான் ஜனநாயகத்தின் சாராம்சம். அதிகாரம் முழுவதும் ஓரிடத்திலேயே, அதா வது மத்திய அரசாங்கத்தினிடமே, குவிந்திருப்பது சுயேச்சை கொண்ட தனிமனிதனது இயல்புக்கு முரணுவதோடு ஜன நாயக லகதியத்திற்கே மாறுபட்டதாகும். - ஐக்கிய ஆட்சிக்கும் சமஷ்டிக்கும் உள்ள வித்தியாசத் தைக் குறிப்பிட்ட இடத்தில், மத்திய அரசாங்கத்திற்கும் அதில் அடங்கிய தனி நாடுகளுக்கும் இடையே ஏற்படும் அதிகாரப் பிரிவினையின்படி தனிநாடுகள் அநேக விஷயங் களில் சுய ஆட்சி கொண்டவை யென்றும், சில விஷயங்க 101