பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் ஜனநாயக ஆட்சி பெரும்பான்மையோரின் ஆட்சியாக மாத்திரம் இருப்பது கூடாது. அது நியாயமும் சமத்துவ மும் பொருந்திய ஆட்சியாயிருக்க வேண்டும். உண்மையான சமத்துவம் படைத்த ஜனநாயக ஆட்சியில் ஜனங்களின் ஒவ் வொரு பகுதிக்கும் அதனதன் பலத்திற்கேற்ற விகிதாசாரப் படி பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும். அதாவது, பெருங் தொகுதியான வாக்காளர்களுக்குத் தொகையிற் பல பிரதி நிதிகள் இருந்தால், சிறுபான்மைக் கூட்டத்தார்களுக்கும் அவர்களுக்கேற்ற சில பிரதிநிதிகள் இருக்கவேண்டும். சிறுபான்மையோருக்கு நியாயமான பிரதிநிதித்து வத்தை எப்படி ஏற்படுத்துவது என்ற விஷயம், இக்கால ஜனநாயக அரசாங்கங்களில் ஒரு பெருத்த பிரச்னையாக இருந்து வருகிறது. அதைத் தீர்க்கப் பல்வேறு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. • • . . . இரண்டாம் ஒட்டு :-பிரிட்டனைப்போல் ஒற்றை அங்கத்தி னர் தேர்தல்முறை அனுஷ்டானத்தில் இருக்கிற தேசத்திற்கு இது ஒக்கும். ஓர் அபேட்சகருக்குத் தீர்மானமான பெரு வாரி ஒட்டு (அதாவது மொத்த ஒட்டுகளில் பாதிக்குமேல்) முதல் தடவையில் கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர் தல் உடனே நடைபெறும். இத் தேர்தலில் முன் நின்ற அபேட்சகர்களில், ஒட்டுப்பலத்தின்படி முதலில் கின்ற இரண்டு பேர்களைத் தவிர மற்றவர்களின் பெயர்களை எடுத்து விட்டு, அவர்கள் இருவரில் யாருக்கு அதிக ஒட்டுகள் கிடைக் கின்றனவோ,அவருக்குத் தேர்தலில் வெற்றி கிடைக்கும். இம் முறைக்கும் ஆட்சேபணை இருக்கிறது. வீண்செலவு ஏற்படு வதோடு இரண்டாவது தேர்தலுக்குமுன் இரகசியமாகப் பேரமும், சூழ்ச்சியும் அதிகரித்து, அவைசியமான, கஷ்டங் o கள் ஏற்படுகின்றன. - - லிமிடெட்டு ஒட்டு அல்லது குறைந்த ஒட்டு முறை-இதன் படி எத்தனை ஸ்தானங்கள் தேர்தலுக்கு இருக்கின்றனவோ, அத்தனை ஒட்டுகள் ஒவ்வொரு வாக்காளருக்கும் இல்லை. இதல்ை சிறுபான்மைக் கட்சியார்க்குக் குறைந்தது ஒரு பிரதிநிதியாவது வர இடம் இருக்கிறது. 126