பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

'நெல்குந்தாவும் பக்காராவும் இரண்டுமே உள் நாட்டில் வாழ்கிற ஒர் அரசன் ஆ ட் சி க் கு உட் பட்டவை.

ఛాభిః Q命 《>令

'மிளகு, வெற்றிலை ஆகிய இரு சரக்குகளும் நாடி இத் துறைமுகத்துக்குக் கப்பல் மிகுதியாக வருகின்றன. பேரளவான மணப் பொருள்களை வணிகர் இங்கே கொண்டு வருகிருர்கள்............ இங்கே கிடைக்கும் பொருள்களுள் முக்கியமானது உள்நாட்டின் முக்கிய விளைவான மிளகு, மற்றெல்லாப் பொருள்களையும் பார்க்க மிகுதியாக அது இத் துறைமுகத்துக்குக் கொண்டுவரப் படுகிறது. இம் மிளகு கொட்டனரிகன் (அதாவது குட்ட நாடன்) என்ற பெயருடைய வகையைச் சார்ந்தது. தலை சிறந்த முத்துக்களின் பெருங்குவியலும் இங்கே வாங்கப் பெறுகிறது. மற்றும் தந்தம், பட்டு நூலிழை, கங்கைக் கரையிலிருந்து வரும் வெட்டிவேர், கிழக்குப் பகுதிகளி விருந்து வரும் வெற்றிலை, பல்வேறு வகைப்பட்ட ஒளிக் கற்கள், வைரங்கள், மாணிக்கங்கள்,பொன்னாட்டிலிருந்து அல்லது லிமிரிகேக்கு அப்பாலுள்ள தீவுகளிலிருந்து வரும் ஆமையோடு முதலியவையும் இத்துறைமுகத்தில் வந்து வாங்கப்படுகின்றன.

  • 2登 •:3 c:

"கொமாரிலிருந்து தொடங்கும் பகுதி கொல்கி (கொற்கை) வரை நீண்டு கிடக்கிறது. முத்துக் குளிக்கு மிடம் இதுவே...இக் கண்டத்தின் தென்பகுதியாகிய இம் மாநிலம் முழுவதும் பாண்டியன் ஆட்சியில் ஒரு கூறு <装@秀逗9·

pg ද්‍රා 43