பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 乳

எண்ணி இன்புறற்குரியது. ஒவ்வொரு பத்தின் முடிவிலும் அப்பத்தின் பாட்டுடைத் தலைவன் பெயரும், செயல் களும், அவனைப் பாடினர் பெயரும், பத்துச் செய்யுள் களின் பெயர்களும், பாடிய புலவர் பெற்ற பரிசிலும், சேர அரசன் ஆண்ட கால அளவும், ஒவ்வொரு பதிகத் தால் குறிப்பிடப்பட்டுள்ளன.

பண்டு சேரநாட்டை ஆண்ட சேரமன்னர் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒரு கிளையினர் உதியன் சேரலாதன் வழியினர். மற்ருெரு கிளையினர் இரும்பொறை வழியினர். இவருள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக்கொண்டு உள் நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக்கொண்டு கடற் கரைப் பகுதியையும் ஆட்சிபுரிந்தனர். இவ்விரு வழியின ரும் தாயத்தினராவர். இவர்களுள் எண்மரைப் பற்றிய வரலாறு இப்பொழுது நாம் காணக்கிடைத்துள்ள பதிற் றுப் பத்துப் பாடல்களால் உணரப்படுகிறது. அவருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல் கெழுகுட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடு கோட்பாட் டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர். செல் வக் கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர்.

2. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

இவருள் ஒருவனகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனே நாம் ஆராயப்புகும் மூன்ரும் பத்திற்குரிய பாட்டுடைத் தலைவன். புகழ் மலிந்த இவன் வரலாற்றுப் பெருமை மூன்ரும் பத்தைப் பாடி அருவி பாலைக்