பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 12f

தென்னிந்தியச் சொற்களைக் காண்கிருேம். ஆனல் திரா விட மொழிகளில் மலேயச் சொற்கள் மிகக்குறைவாக அருகியே வழங்குகின்றன. இது பழந்தமிழர் பலர் மலேயாவில் குடியேறி இருந்தனர் என்பதையும், அதற்கு மாருக ஒரு சில மலேயரே தென்னிந்தியாவில் குடியேறி உயிருந்தனர் என்பதையும் விளக்குகிறது.

சொற்செல்வத்தையே அன்றித் தமிழர் கிழக்கு நாடு கட்குக் கலைப் பண்புகளையும் சமயக் கருத்துக்களையும் வாரிவழங்கியுள்ளனர். ஆணுல், ஒருவகையில் தமிழினத்

தலைப்புகளுள் தமிழர் வழங்கிய கொடை மறைந்துள் ளது. வடமொழியின் வரம்பற்ற செல்வாக்கால் பின் நூற்ருண்டுகளில் கிழக்குத்திசை நாடுகளில் பேரளவில் பனைத்து ஓங்கிப் பரவிய இந்து இந்தியக் கோட்பாடு கட்குக்கூடக் காரணம் திரைகடலோடித் திரவியம் தேடத் தமிழர் மேற்கொண்ட முயற்சியே, இவ்வுண் மையை விளக்கவ்ல்ல பல சான்றுகளைக் கிழக்கு மேற்கு நாட்டு அறிஞர் பெருமக்கள் அந்நாடுகளின் வரலாறு களை பற்றி வரைந்துள்ள ஆராய்ச்சி நூல்களிால் நன்கு அறியலாம்.

இலக்கியங்களாலும் கல்வெட்டுகளாலும் வரலாற்று நூல்களாலும் சோழப் பேரரசர்கள் காலத்தில் கிழக்கு நாடுகளில் தமிழரசு ஆட்சி செலுத்திய உண்மை உறுதி பெறும். அதன் பயஞ்கப் படையெடுத்தும் கடையெடுத் தும் சென்ற தமிழ் மன்னரும் தமிழ் மக்களும் அருந் தமிழ்ப் பண்புகளையும் அலைகடலுக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி மேலைநாட்டு வரலாற்றறி ஞர் ஒருவர் கூற்றையும் உலகஞ்சுற்றிய தமிழர் ஒருவர் இவ்வுண்மைக்கு அரண் செய்யும் மேற்கோள்கள் சிலவற்றிற்குப் பிற்சேர்க்கை பார்க்க.