பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை #3;

மேற்கண்ட செய்திகட்கு மேலும் அரண் செய்யும் வகையில், இருபதாம் நூற்ருண்டுத் தமிழின் ஏற்றத்தின் தோற்றமாய்-பெருமையாய்-விளங்கும் கலைக்களஞ் சியக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளே இந்நூல் பிற்சேர்க்கை எண் 1-ல் காணலாம்.

தமிழக நாகரிகத்தின் செல்வாக்கு கிழக்கு நாடுகளில் பரவிய அந்த அளவிற்கு மேற்கு நாடுகளில் பரவவில்லேபரவும் வாய்ப்பில்லே-என்பது உண்மையே ஆயினும்: ஐரோப்பிய மொழிகளிலும் நாகரிகத்திலும் ஒரளவேனும் தமிழ் கூறுகள் உள்ளமையை எவரும் மறுத்தலோ, மறைத்தலோ இயலாது. ஹீப்ரு, கிரேக்க மொழியி லுள்ள திராவிடச் சொற்கள் பற்றி ஒரு நூற்ருண்டுக்கு முன்பே பேரறிஞர் கால்டுவெல் ஆராய்ந்து கூறியுள் ளார்.' மேற்கு ஆசிய நாட்டு மொழிகளுள்ளும் பிடி’ என்ற தமிழ்ச்சொல் குடி புகுந்திருத்தல் கூடும் என்று பேரறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி கருதுகிருர், சென்ற ஆண்டு (1962) சென்னைப் பல்கலைக் கழகத்தில் சர். வில்லியம் மேயர் நினைவு நிதிச் சொற்பொழிவாகத் 'திராவிடர் தோற்றம் பற்றி நிகழ்த்திய ஆறு அரிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளில், பேராசிரியர் உயர் திரு.டி, பாலகிருட்டின நாயர் அவர்கள் இப்பொருள் தொடர்பாகப் பல சிறந்த புதுக் குறிப்புகளைப் புலப்படுத் தியுள்ளமை நன்றியோடு போற்றற்குரியதாகும்.

சில ஆண்டுகட்குமுன் காஞ்சீபுரத்தில் கிறித்துவ சமயத் தொண்டாற்றிக்கொண்டிருந்த ஒரு ஸ்காட் லாண்டு பாதிரியார் என் உறவினர் ஒருவர் திருமணத்

10. Dravidian comparative Grammar 1956 pp. 88–?05. 11. பேராசிரியர் திரு. தெ. பொ. மீ. மணிவிழா மலர்

பக்கம், 396-400,