பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

திற்கு வந்தபோது, அவர்கள் நாட்டுத் திருமணத்தின் போதும் உள்ள நெல் தூவ்ல் தமிழ்நாட்டிலிருந்து வந்த வழக்கமாகவே இருத்தல் கூடும் என்று என்னிடம் தெரி வித்தார்.'

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா நாடுகளின் வாழ்வில் ஏற்பட்ட தமிழர் செல்வாக்கின் சுவடுகளை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்க் கலைக்களஞ்சியம் தரும் ஒரு குறிப்பையும் அருட்டிரு டாக்டர் தனிநாயக அடிகளார், தம் தமிழ்த்துரதில் தரும் இரு குறிப்புகளையும் ஈண்டு நினைவு கூர்தல் பொருத்தமும் பயனும் உடைய தாகும்.

"இந்திய சமுத்திரமும் வாணிபமும்:

இந்தியசமுத்திரம் உலகிலுள்ள மிகப்பெரிய வியாபார வழிகளுள் ஒன்று. பண்டைக்கால முதல் இக்கடல் வழி யாக இந்தியாவுக்கு எகிப்து, மெசப்பொடேமியா, கிழக்கு மத்தியதரைக்கடல் நாடுகள் ஆகியவற்றுடன் வியாபாரம் டந்து வந்ததாகத் தெரிகிறது. தமிழ் நாட்டிலிருந்து மயில் ேத ைக, அகில் முதலிய பொருள்கள் பாபிலோனியா சென்றன என்று கிறிஸ்துவ வேதத்தால் தெரியவருகின்றது. தமிழ் நாட்டுத் தேக்குமரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த கல்தேயர் நகர மாகிய ஊர் (Ur) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள் ளது. தமிழகத்திலிருந்து பல பொருள்கள் ரோமாபுரிக் குச் சென்றதாகத் தமிழ் நூல்களிலிருந்தும், ரோம ஆசிரியர் பிளினியின் நூல்களிலிருந்தும் தெரிகிறது.

12. உதவினர் பெயர்: திரு.ப.கோ. தாதமுனி முதலியார்: பாதிரியார் பெயர்: ரெவரண்டு ஆர். எல். மான் சென். 13. கலைக்களஞ்சியம்-தொகுதி, 1; பக். 568.