பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌密翠 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

வற்புறுத்தும் பண்புடைய மனித ஆன்மா இதயத்தின் தனிச் சிறப்பார்ந்த வெளிப்பாடு.

இ. சிலப்பதிகாரப் பெருங்காப்பியம்

இது மானுடக் காதலின் அவல முடிவை உரைக்கும் கதையாலும் பெருங்காப்பியச் சிறப்பாலும் வரிப்பாடற் பகுதிகளின் கவிதைக் கவர்ச்சியாலும் மந்திர ஆற்றலா லும் மன்பதையின் தலைசிறந்த பெருங்காப்பியக் குழுவுள் சேரும்.

4. பததிப் பனுவல்கள்

பரம்பொருளைக் காண மனிதன் க | த ல கி க் கசிந்துருகிச் செய்த முயற்சிகளுள் ஒன்றே வைணவ சைவ பக்தி இயக்கம். அதன் மிக உயர்ந்த இலக்கியச் சொல்வடிவே மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், நம்மாழ் வார் ஆண்டாள் பத்திப் பனுவல்கள்.

5. சைவசித்தாந்தம்

இது மனித சிந்தனையுள் மிகுந்த விழுப்பமும் மதி

நுட்பமும் படைத்த தத்துவ நெறிகளுள் ஒன்று.

6. சோழர் காலத் தென்னக உலோக உருவங்கள்

மன்பதையின் மிகச் சிறந்த படைப்புக்களைச் சார்ந்த

மிக உயர்ந்த வியத்தகு திருவுருவங்கள் இவை.

7. திராவிடக் கோயிற்சிற்பக் கலை

இக்கலையின் தலைசிறந்த எடுத்துக்காட்டுகள் தஞ்சை, சிதம்பரம், மதுரைக் கோயில்கள்.