பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置ö尝 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

றப்பட்டவர் தமிழர்களே. சுருங்கச் சொன்னல், செல்வம் சேர்க்கும் முயற்சி எங்கெல்லாம் தேவையோ அங்கெல் லாம். இந்திய இனத்தவருள் குறைந்த மூடநம்பிக்கையும் சிறந்த முயற்சியும் தளரா உழைப்பும் உடைய தமிழர் கூட்டம் கூடிவிடும்."

இக்கருத்துக்கு மேலும் விளக்கமாக இலங்கும் சில செய்திகளை அறியப் பிற்சேர்க்கை -ல் காண்க.

இனி, இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிடத்தக்க முக்கியச் செய்தி ஒன்று உண்டு. அது உலக நாகரிகத் திற்கே தமிழ் நாகரிகமே வித்தும் வேரும் ஆகும் என்பதே. இவ்வுண்மையைப் பல்லாண்டுகளாகவே அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது ஆராய்ந்து கூறி வந்துள்ளார்கள். சான்ருகச் சென்னைப் பச்சையப்பர் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியராய் விளங்கிய டி. ஆர், சேஷஐயங்கார் போன்ற மறைந்த சான்ருேர்களும். டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் போன்ற இன்று நம்மிடையே வாழும் அறிஞர் பெருமக்களும் ஆக்கித் தந்துள்ள ஆராய்ச்சியுரைகளைக் குறிப்பிடலாம்.'a

உலகிற்குத் தமிழ் நாகரிகத்தை உதவிய தாயினம் தமிழினமே என்னும் உண்மையை மிகச்சிறந்த முறையில் பல்லாண்டுகட்கு முன்பே ஆராய்ந்து வெளிப்படுத்திய வரலாற்றுப் பேராசிரியர், காலஞ் சென்ற வி. ஆர். இராம

19. {a} {i} T. R. Sesha Iyengar—Dravidian India.

(ii) உலகெங்கும் தமிழரிடமிருந்து நாகரிகம் பரவி யது என்பது-அ. சிதம்பரநாதன் (இப்போது டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர் கள்)-செந்தமிழ்ச் செல்வி-சிலம்பு 4, பரல் 12, பக்கம் 706-711.