பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 135

சந்திர தீட்சிதர் அவர்களே. இப்பெரும் பணிக்காக அவர் களுக்குத் தமிழகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது. அவர்க்கு அவ்வாறு நாம் செலுத்தும் நன்றி கலந்த வணக்கங்கட்குச் சான்ருக, இக்கட்டுரையைத் "தமிழர் தோற்றமும் பெருக்கமும் என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள ஆங்கில நூலிலிருந்து சில பகுதி களேத் தமிழாக்கி நிறைவு செய்வதே பொருத்தமும் பயனும் உடையதாகும். அவை வருமாறு:

"இச் சூழ்நிலைகளையெல்லாம் நாம் உள்ளத்தில் கொண்டு நுணுகி ஆராய்வோமானல், கிழக்கு, நடுவு நிலைப் பண்பாடுகளின் தந்தையர் திராவிட மொழிகளைப் பேசிக்கொண்டு தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களே என்பது தெளிவாகும்.....அதனல், என்னுடைய அடக்க மான ஆராய்ச்சிப் பயன் நாகரிகத்தின் வருங்காலம் பிறந்தது நடுவுநிலைப் பகுதி அன்று, இந்தியத் தீபகற் பத்தின் கடற்கரை ஒரமே ஆகும் என்பதேயாகும். சிறப் பாக, அந்நாகரிகம் பிறந்த இடங்கள் காவிரி, தாமிர வருணி, பெரியாறு, அமராவதி ஆகிய ஆற்றங்கரைகளே ஆகும். அவற்றுடன் கிருஷ்ணை, கோதாவரி, நருமதை ஆற்ருேரங்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது."

1.காம் இங்குக் குறிப்பிட வேண்டுவது தென்னிந் தியா தனக்குத் தேவையான பொழுது அயலகப் பண்பாடு களையும் ஏற்றுக்கொண்டது."

“...சீன நாட்டுக்கு மிகு பழங்காலத்திலேயே இந்தியா விலிருந்து சென்றவர்களுள், கி. பி. ஆரும் நூற்ருண்டில் காஞ்சிபுரத்து இளவரசர் ஒருவர், போதிதருமர் என்று

20. Origin and Spread of the Tamils—V. R. R. Dikshitar

pp. 27 # & ή και pp 34 3

27,