பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கல்ை 145

உரைநடை, இறையஞர் அகப்பொருளுரை, வரி வடிவம் பெற்ற நிலையில் சிலப்பதிகார உரைநடைக்குப் பிற் பட்டது. ஆயினும், இறையனர் அகப்பொருள் உரை நடை பல்லாற்ருனும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும். அதஞலேயே அதனை உரை நடையின் ஊற்றிடம்’ என்றும் ஆராய்ச்சி அறிஞர் போற்றுவர்." கட்டுரைக் கலே பற்றிச் சிறப்பாக ஆராயும் நாம் எண்ணி மகிழ்தற் குரியது, இக்கலைக்குரிய கரு இறையனர் அகப்பொருள் உரையில் அமைந்திருத்தலே ஆகும். இறையனர் சூத்திரங் கட்கு நக்கீரர் வகுத்துள்ள உரை பலவும் தனித்தனிக் கட்டுரைகளாகப் போற்றத்தக்க வடிவும் சுவையும் பெற்றுள்ளன. தமிழ் உரை நடை நூலின் ஆசிரியர், இறையனர் யாத்த இரண்டடிச் சூத்திரம் ஒன்றிற்கு நக்கீரர் கண்ட உரை அறுபது பக்கங்கட்கு அமைந்துள்ள பான்மையினை எண்ணி வியக்கிரு.ர். உரை நடையின் ஊற்றிடம் பற்றிக் கட்டுரை வரைந்த பேராசிரியர் டாகடர் மொ, அ. துரை அரங்களுள் அவர்கள் இறையனர் அகப்பொருள் உரை இன்பம் பற்றிக் கலையுணர்வோடு கூறி நம்மை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிரு.ர். அவர்தம் வாசகம் வருமாறு:

"இவர் உரையே ஒர் அழகிய தமிழ்ச்சோலை: பூமரங் களும் பழமரங்களும் நிறைந்து மணமும் சுவையும் பயப்ப தோர் இன்பச் சோலே, தண்ணிழல் தந்து, நண்ணுவார்க் கெல்லாம் வெயர்வை போக்கி அயர்வைத் தீர்க்கும் அருட்சோலை, பூந்தடம் நிறைந்து மாந்துவார்க்கெல்லாம் இன்சுவை மிகத்தரும் இணையிலாச் சோலை. உரைநடை

30. மாணவர் மன்றம் வெள்ளி விழா மலர் (1957)

பக், 17-21.

31. தமிழ் உரை நடை (1959)-பக். 99

32. மாணவர் மன்றம் வெள்ளி விழா மலர் பக். 21

ஆ-10