பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பதினரும் நூற்ருண்டில் தமிழ் வசன நூல்கன் உண்டா யிருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. கி. பி. கடுஎை-ஆம் ஆண்டில்தான் தமிழில் முதல் முதல் வசன நூல் உண்டானதாகத் தெரிகிறது. இந்த நூலுக்குக் கிறிஸ்தவ வேதோபதேசம! (FIos Sanctorum) ατότLg ()uiuif. ஏசுவின் சபைப் பாதிரிமாரால் எழுதி அச்சிடப்பட்ட இந்த முதல் தமிழ் வசன நூல் இப்போது இந்தியாவில் இல்லை என்பது தெரிகிறது. ஒரு வேளை ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள புத்தகசாலைகளிற் கிடைக்கக்கூடும். இந்த நூலை யார் இயற்றினர் என்பது தெரியவில்லை. சவேரியார் என்னும் செயின்ட் லேவியர் எழுதினர் என்று சிலர் சொல்லுகிருர்கள். இது தவறு. ஏனென்ருல், சவேரியாருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆகையால், இந்த முதல் தமிழ் வசன நூலே அவர் இயற்றி யிருக்க முடியாது. இந்த நூல் அச்சிட்ட பிறகு, கடுஎடில் கிறிஸ்தவ வணக்கம் என்னும் நூல் அச்சிடப்பட்டது. இந்த வசன நூலே எழுதியவர் egyéirőlë (Anriquez) என்னும் ஏசுவின் சபையைச் சேர்ந்த பாதிரியார் என்று தெரிகிறதேயன்றி, அவரைப்பற்றிய வேறு வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இந்த நூலும் நமது தேசத்தில் இப்போது கிடைக்கவில்லை. பாரிஸ் நகரப் புத்தகசாலை யில் இந்தப் புத்தகத்தின் பிரதியொன்று இருப்பதாக நிச்சயமாகத் தெரிகிறது. கசு-ஆம் நூற்ருண்டில், மேற் சொன்ன இரண்டு நூல்களைத் தவிர ஏசுவின் சபையைச் சேர்ந்த ஐரோப்பியப் பாதிரிமார் தமிழ் கற்பதற்காகச் சில நூல்கள் அச்சிடப்பட்டனவாகத் தெரிகின்றன. ஆனல், அந்நூல்களைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. தமிழில் முதல் வசன நூல் உண்டானது கடுஎஎ-ல் என்பது மட்டும் உறுதி காகத் தெரிகிறது.”

35. கிறிஸ்தவமும் தமிழும் (1936), பக். 22-4.