பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

“மீளவுந்தான் கரை ஏறுவதன்றியே பிறரையுமேற்ற வருந்துவது உத்தம தேவதொழிலாயினும் இதிலே பிறர்க் கும் உதவியின்றித் தனக்குங்கேடாக யாதொருவன் பிழை செய்தால் நிர்ப்பாக்கியங்களினும் நிர்பாக்கியமாகும் என் றமையால் இத்தொழிற்செய்வதற்குஆயத்தமும் பிறர்க்கு உதவத் தன்னக் காத்தலுந் தன்னக் காப்பது வேண்டிப் பிறரை மறவாதிருத்தலும் இதற்கு அஞ்சினவர்க்கு உறு தியுஞ் சொல்லி இத்தொழில் பலிக்கும்படிக்கு வழிகள் பல வற்றையும் இதனை நன்ருய் முடிக்கும் பற்பல முறைகளை யுங்காட்டி இருபது அதிகாரங்களாக இப்பயனை வகுத்துத் தருவோம். நாம் இதைக் குறைவழுவின்றி முடிக்கவும், இதிலே நாம் நினைத்த பலனை எவருங் கைக்கொள்ளவும், மனிதரை இரட்சிக்கும் இத்தொழிலைச் செய்ய மனுக் குலத்து ஒரு மகளுக வந்த சேசுநாதர் உதவ மன்ருடிஅவர் திருப்பாதத்தை நமது தலையணியாக ஏற்றி வணங்கு கிருேம்."

வீரமாமுனிவர்க்குப்பின் கட்டுரைக் கலைக்கு ஒளி யூட்டிய பெரியார் இராமலிங்க அடிகளார் ஆவார். கல்லை யும் கனிவிக்கும் அருட்பாக்களைப்பாடிய இராமலிங்க அடி களார் படைத்துள்ள அரிய உரைப்பகுதிகளும் பல." அவற்றுள் 'ஜீவகாருண்யஒழுக்க'மும் "மனுமுறை கண்ட வாசகமும் புகழ்பெற்றவை, ஈண்டு இராமலிங்க அடிக வார் வளர்த்த கட்டுரைக்கலைக்கு ஒரு சான்று காண் GLIT H.**

38. திருவருட்டா-சென்னைச் சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு (1942).

39. திருவருட்பா-சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளி யீடு (1942), வசன பாகம், பக். 109,