பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 置莎统

பெற்ற அப்பெரியார், எளிய இனிய தமிழ் நடையைக் கையாண்டு, கட்டுரைக்கல தழைத்திடச் செய்தார். அவர் எழுதியளித்த நினைவு மஞ்சரி, நல்லுரைக் கோவை,’ "புதியதும் பழையதும், கான் கண்டதும் கேட்டதும் முதலிய நூல்கள் சிறந்த கட்டுரைத் தொகுதிகளாகும். அப்பெரி யாரின் கட்டுரை நடைக்குச் சான்ருென்று வருமாறு:

"மருதபாண்டியர்

'சிவகங்கை ஸ்மஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக் குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்று ஒருவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும், வித்துவான்களும், அவரை மருதபாண்டியர் என்று வழங்கி வந்தனர். மகா ராஜாவென்றும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகையான பரிசுகளே வழங்கினர். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு சல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவனவற் றைக் கேட்டுமகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவர்க்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங் களும், சமயத்திற்கேற்ப இயற்றியுள்ள பல தனிப்பாடல் களும் அங்கங்கே வழங்கி வருகின்றன. அவர் சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருடர்கள் பயம் முதலியன இல்லை யென்று சொல்வார்கள். அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.

"அவர் தெய்வபக்தி உடையவர். தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப் படி காலத்தில் நடந்து வரும் வண்ணம் வேண்டியவற்

42. தான் கண்டதும் கேட்டதும், பக். 66-7,