பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#fff; ஆராய்ச்சிக் கட்டுரைகள்

றைச் செய்து வந்தார். பல ஸ்தலங்களில் அவர் திருப் பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதான மாக நிலங்களை அளித்திருக்கின்ருர், முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தல மாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ் செய்து படித்துறைகள் கட்டு வித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயரா லேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்ன மரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடி மலைமேற் சில மண்டபங்களை அவர் கட்டியிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக் கப் பெற்றன. அவற்றில், மேலே உள்ளது மருது பாண் டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழேயுள்ள சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்குமுன் கட்டப்பட்டது. அவற்றைக் குறித்து மேலைச் சாளரம் எங்களப்பன், கீழைச் சாளரம் வெங்களப் பன் என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கி வருகிறது. அக்காலத்தில் ஜனங்கள் மருத பாண் டியரை எங்கப்பன்' என்று சொல்லி வந்தனரென்பத ேைலயே, அவருடைய உத்தம குணங்களும் குடிகளுக்கு அவர்பால் இருந்த அன்பும் புலப்படும்.”

பெரும்புலவர் சாமிநாதஐயரை அடுத்துக் கட்டுரைக் கலையை ஆங்கில இலக்கியப் புலமையோடு புதுமெருகு பெறச்செய்த பெருந்தகை மறைமலை அடிகளாராவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் செம்மை யாகக் கற்றுப் புலவர் ஏருய்த் திகழ்ந்த மறைமலை அடிகளார் தமிழ் மொழியில் தமிழ் மக்களின் நல்வாழ்வு கருதி வேற்றுமொழிச் சொற்களைக் கலவாத" விழுமிய

43 ஒருமொழியில் பிறமொழிச் சொற்களைத் தவிர்க் கவே முடியாத தெருக்கடியிலன்றி பிறபொழுதுகளில் கலத்தல்