பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக்கலே 霞が尋

'அவ்விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப் பர்கள் ஆன் கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினத் கட்டிவைத்து, ஆன் நிரைகளை அடுத்துள்ள மலேச் சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேய விட்டுத் தாம் மரநிழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக் கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில் கள் நெற்றித் தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையோடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணுந்து பார்த்தவாருய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

"காதலிளும் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகி ழாத காதலன்யின் மிகுதியால் தோளோடு தோன் பிணையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தோறுத் தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுத ையும்; ஆண் மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடை மயில் கண்டு களிப்ப ஒருபுறம் ஆடுதலையும், மலையி லிருந்தொழுகும் அருவிநீர் கூழாங்கற் படையின்மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத் துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிறம்பித் துளும்ப, அதன் கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலகளின் மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர்தலையும் விரும்பிக் கண்டு, நறுமணங் கமழும் பூக்களே மரங்களி னின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினலென இனிய நேயமொழிகள் பேசிக் கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.'

44. முல்லேப்பாட்டு ஆராய்ச்சியுரை (பக். 1965) உ-ச,