பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து g

குடியின் புகழ் விளங்கப் பிறந்த பெருமாளுகிய இளங்கோ அடிகளும் இவ்வரலாற்றை,

"கான்மறை யாளன் செய்யுள் கொண்டு

மேனிலை யுலகம் விடுத்தோன்."

(சிலம்பு. 28:137-8)

என்று தம் காவியத்துள் பொன்னே போலப் போற்றி யுள்ளார். மற்றும் உச்சிமேற் புலவர் கொள் நச்சினர்க் கினியர், இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனப் பாலக் கெளதமஞர் துறக்கம் வேண்டினரென்று குறிப்பு வகையாற் கொள்ளவைத் தலின், இது வஞ்சிப் பொருளில் வந்த பாடணுயிற்று” (தொல், புறதி.5ே) என்று வரையும் உரைப்பகுதியும் ஈண்டுக் கருதற்பாலது. இவ்வாறு உரையாலும் பாட் டாலும் போற்றப்படும் இந்நிகழ்ச்சி இன்றும் மலை நாட்டில் கர்ணபரம்பரைக் கதையாய்,- சரித்திரமாய் வழங்கி வருகிறதென்பர்.'

4. குட்டுவனின் முன்னுேர்

இனி, பாலக்கெளதமரிைன் உள்ளம் கவர்ந்த உத்த மணுகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிச் சிந்திப்போம். குட்டுவன் முன்னேர் மாசிலாப் புகழ் வாய்ந்த பெருஞ்சிறப்புடையவராவார். அவர் பெருமை யைப் பாலைக் கெளதமனுர் போற்றியுள்ள திறம் கற்பார்க்குக் கழிபேருவகை அளிப்பதாகும். குட்டுவன் முன்னேர் தம் குடிமக்கள் தீமை அகற்றி தன்மை புரிந்தும், பிறரை வருத்தாமலும், மற்றவர் பொருளை

1. பதிற்றுப்பத்து: டாக்டர்.உ.வே.சா. பதிப்பு, iেsলা) பக்கம், 18. -