பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 跨器

19. கா. நமச்சிவாய முதலியார் 14. எஸ். வையாபுரிப் பிள்ளை 42. மகிழ்நன் 13. நீலாம்பிகை அம்மையார் 14. இராஜேஸ்வரி அம்மையார் 15. வ. ரா.

16. டி. கே. சி.

17. கல்கி

மேலுள்ள பட்டியல் முழுமையானதன்று. எனி னும், இருபதாம் நூற்ருண்டுத் தமிழ் இலக்கிய வர லாற்றில் கட்டுரைக் கலையை வளர்த்தோருள் குறிக் கத்தக்கவர்கள் இவர்கள். இப்பெரியோர்களுள் நாவலர் பாரதியார் நடை சற்றுக் கடினமானது; பழைய உரை யாசிரியர்கள் நடையைத் தழுவியது: செறிவும் சிறப்பும் வாய்ந்தது; கற்ருர்க்குக் கழிபேருவகையளிப்பது. இவர் கள் எழுதிய தயரதன் குறையும் கைகேயி கிறையும்', 'திரு வள்ளுவர், சேரர் வஞ்சி, பழந்தமிழ் நாடு என்னும் நூல்கள் "கட்டுரைக் கலை வளர்ச்சியில் கருதத்தக்க படைப்புக ளாகும். திரு. ரா. இராகவையங்கார், திரு. மு. இராகவையங் கார், காவலர்-நாட்டார், பண்டிதமணி, உலகநாதப்பிள்ளே,செல்வக் கேசவராய முதலியார், திருநாவுக்கரசு முதலியார், நமச்சிவாய முதலியார், கா. சு பிள்ளை, வையாபுரிப் பிள்னே ஆகியோர் பழந் தமிழ் மரபுக்குக் கேடின்றி இலக்கியக் கட்டுரைகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதுவதில் புகழ்பெற்ற வர்கள். மகிழ்நன் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற் றில் தனிச் சிறப்புப் பெறத்தக்கன. தமது கூர்ந்த அறிவும் ஆழ்ந்த நகைச்சுவையும் புலப்படக் கட்டுரைகளை எழுதிய வர் மகிழ்நன் அவர்கள். மகிழ்நன் கட்டுரைகள்', 'வடக்கும் தெற்கும் முதலாய அவர் நூல்களைக் கற்பார். தமிழ்மொழி இற்றை நாளில் சிறந்து வளர்ந்து வரும் நகைச்சுவுைக்