பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲68 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அவர்கள் இதுகாறும் எழுதியுள்ள கட்டுரைகள் முந் நூற் முக்கு மேற்பட்டன. திருவள்ளுவர் நூல் நவம்', 'சிலப்பதிகார நூல் நயம், கடற்கரையிலே, தமிழ் இன்பம்’, ‘தமிழ் விருந்து.' தமிழ் வீரம், அல்பும் கலையும்', 'வேலின் வெற்றி", "ஆற்றங் கரையிலே என்னும் நூல்கள் இந்த நூற்ருண்டில் தமிழ் மொழி பெற்ற சிறந்த கட்டுரைச் செல்வங்களாகும். பேராசிரியர் அவர்கள் கட்டுரை நடை எளிமையும் இனிமையும் நிறைந்தது: கற்பார் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உரனுடையது. அச்சிறப்பினைப் பேராசிரியர் கா. சு. பிள்ளே, அறிஞர் திரு. வி. க. போன்ற மறைந்த சான் ருேர்கள் மனமாரப் போற்றியிருத்தலை முன்னவர்தம் "தமிழ் இலக்கிய வரலாற்றுள்ளும், பின்னவர்தம் வாழ்க் கைக் குறிப்புகளுள்ளும் காணலாம்."

இககாறும் கட்டுரைக்கலையின் இறந்த காலம் பற்றியும் நிகழ்காலம் பற்றியும் கண்டோம் இனி அதன் எதிர்காலம் பற்றியும் சிறிது சிந்திப்போம். கடந்த கால நூற்ருண்டாகத் தமிழ் மொழியில் கட்டுரைக்கலை வளர்ந்துவரும் நோக்கையும் போக்கையும் நுணுகி ஆராயுங்கால், பரந்துபட்டதோர் எதிர்காலம் அதற்குக் காத்திருக்கிறது என்பது இனிது புலகுைம். ஏறத்தாழ இருபத்தைந்துக்குக் குறையாத பொருள் பற்றி இன்று அது வளரத் தொடங்கியுள்ளது. அப்பொருள்களாவன:

இ. அரசியல் 2. இலக்கணம் 3. இலக்கியம் சி. உறவியல் 5. கல்வெட்டு

50. (1) இலக்கிய வரலாறு, பக். டுச0.

(2) திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் பக். 212.