பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள் பெருந்தமிழ்த்தொண்டு

ஓர் ஆராய்ச்சி

(அ) வாழ்க்கை கலன்கள்

முன்னுரை : 'செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை' என்று போற்றினர் சுத்தானந்த பாரதியார். இப்புகழுரை பல் லாற்ருனும் பொருள் செறிந்த பொன்னுரையே என்ப தைப் பேராசிரியர் சேதுப்பிள்ளையின் தமிழுருவான தொண்டு வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பவர் எவரும் எளிதில் உணர்ந்து இன்புறுவர். செந்தமிழ்ப் பேச்சுக்கும் செந்தமிழ் எழுத்துக்கும் மட்டுமன்றி, செந்தமிழ் வாழ் வுக்குமே பேராசிரியர் அவர்கள் ஏறத்தாழ அரை நூற்ருண்டுக் காலம் ஆற்றியுள்ள அருந்தமிழ் தொண்டு தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக் கத் தகும். பேராசிரியர் ஆற்றிய தொண்டின் பயனையும் பெருமையையும் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனர் அவர்கள் உண்மையும் உணர்ச்சியும் கலந்த உரைகளால்

பேராசிரியர்-டாக்டர் ரா. பி. சே. அவர்கள் வெள்ளி விழா நினைவு மலரில் வெளியிடப் பெற்றது.

1. தமிழின்பம் (1659) - சேதுப்பிள்ளை - முன்னுரை, பக், V.