பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......... 五77

சோலேயும் வயலும் சூழ்ந்த அத்திருப்பதியில் தனக் குவமையில்லாத் தலைவன் தன்னந்தனியணுய்த் தாண்ட வம் புரிகின்ருன்.

“இத்தகைய செப்பறையைச் சேர்ந்த சிற்றுார் இராசவல்லிபுரம் எனப்படும். பயிர்த்தொழில் செய்யும் கார் காத்த வேளாளர் பண்புற்று வாழும் அவ்வூரில் அகிலாண்டநாயகி கோயில் கொண்டுள்ளாள். அவ் வம்மையை மதுரத் தமிழாற் பாடிஞர் மாதவச் சிவஞான முனிவர்,

'அருள்ஞான வாரியே ராசைமே வியசெல்ல

அகிலாண்டம் என்னும் அரசே :

என்பது அவர் திருவாக்கு."

பெருமாள் பிள்ளை - சொர்ணம்மாள் : சிறப்பு வாய்ந்த இச்சிற்றுாரில் கார்காத்த வேளாளர் குடியில் தோன்றிச் சீர்பெற வாழ்ந்த செம்மல் பெருமாள் பிள்ளை என்பவராவர். குடிப்பண்புக்கு ஏற்ப வேளாண் வாழ்க் கையில் விருப்பும், சிவ வழிபாட்டில் தனியா வேட்கை யும் கொண்டு விளங்கிய சான்ருேர் அவர். அவர்தம் இனிய வாழ்க்கைத் துணைவியாரே நம் பேராசிரியரைப் பெற்றெடுத்துப் பெரும்புகழ் கொண்ட சொர்னம்மாள். பெயருக்கேற்ற பண்புபடைத்த இப்பெற்ருேர்கள் வர மிருந்து பெற்ற பிள்ளேயே நம் பேராசிரியர். ஆம். வரமிருந்து என்று சொல்வது வெற்று உபசாரம் அன்று உண்மையாகவே அப்பெற்ருேர் வரம் கிடந்தனர் காரணம், பேராசிரியருக்கு முன் பிறந்த பதிளுெரு பிள்ளை களையும் காலனுக்குப் பறிகொடுத்துக் கலங்கியிருந்தனர் அச்சான்ருேர், அந்நிலையில், பெற்ருேர் துயர் தீர்க்கும் ஒரு மருந்தாய்-பிறந்த நாட்டின் பிணி தீர்க்கும் பெரு

ஆ-12