பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து - 醇

அளிக்கும் பெருவிருந்து வற்ருத வளமுடையது. அரிசி யைக் குற்றிக்குற்றிப் பூண் தேய்ந்த உலக்கையையும், அடைச்சேம்பு போன்ற சோறு சமைக்கும் மிடாவினையும், கூரிய வாள் கொண்டு கொத்துதலால் ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக்கட்டையையும் நின் அட்டிற்சாலையில் காண்பார் மதி மருளும். உண்பாரும் தின்பாருமாய் வருவோர் அளவிறந்து இருந்த போதும் நின் விருந்துவளம்--சோற்றுவளம்-குன்ருத புதுமை யினை உடையதாய்ப் பொலிந்தது. இத்தகைய விருந்து வளத்திற்குக் காரணமான நின் செல்வவளம் வாழ்வ தாக!” என இவ்வாறு குட்டுவனின் கொடை வளத்தை மனமாரப் போற்றி வாழ்த்துகின்றனர் சங்கப் புலவர் பாலேக்கெளதமஞர்.

'உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்ருே றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எ.குறச் சிவந்த ஆனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி,

ఖీ 婆 பேரர பாணர்த்தால், வாழ்கநின் வளனே!"

(பதிற்றுப்பத்து.24:18-22;30) அவரே தன் மற்ருெரு பாடலில் நாடெல்லாம் பசுமையற்று வற்கடமுற்ற காலத்திலும் குட்டுவன் ஒம்பா ஈகையுடையளுய் விளங்கும் திறத்தினை வாயாரப் புகழ்ந் துள்ளார். இலே உதிர்ந்துபோன உன்னமரத்தின் சிறுசிறு கிளைகளிலே சிள்வீடென்னும் வண்டுகள் ஒலிக்கும் தன்மை யான பெருவறங் கூர்ந்த காலத்து, வயல்களெல்லாம் உலர்ந்து போய் விட்டன. அந்நிலையில் இசைக்கருவிகளை யிட்டுச் சுருங்கிக்கட்டிய பையோடு ஊர் மன்றங்களை அடை”து ஆங்கே மறுகுகளின் சிதறக்கண்ணே நின்று