பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}8:፧ ஆராய்ச்சிக் கட்டுரைகள்

எய்தியுள்ளது. சிற்ருசிரியராகப் பணி புரிந்த காலத்தி லேயே கலை பயில் தெளிவும் கட்டுரை வன்மையும் கடமை உணர்வும் மிகுதியாகப் படைத்திருந்த பிள்ளே அவர் களிடம் அந்நாளில் தமிழ் கற்ற மாணவர்களுள் ஒருவரே, புகழ் பெற்ற உயர்மன்ற நடுவராய் ஒளிர்ந்து அண்மை யில் ஒய்வு பெற்ற உயர்நடுவர் என். சோமசுந்தரம் அவர்கள்.

வழக்கறிஞர்-நகராட்சித் துணைத் தலைவர்:

பேராசிரியர் அவர்கள் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் சிற்ருசிரியராகப் பணி புரிந்தபோதே சட்டக் கல்லூரியிலும் மாணவராய்ச் சேர்ந்து சட்டக் கலை பயின்ருர்கள். அந்நாளில் சென்னைப் பச்சையப்பர் கல்லூரிக்கு அண்மையிலேயே சட்டக் கல்லூரி அமைந் திருந்தது இங்கு நினைவு கூர்தற்குரியது. இன்று பச்சை பப்பர் உயர்நிலைப்பள்ளி மட்டும் இருக்கும் இடமே அன்று பச்சையப்பர் கல்லூரியும் இருந்த இடம். 1940-ஆம் ஆண்டிலேதான் சென்னைப் பச்சையப்பர் கல்லூரி நம் அருமைத் துணைவேந்தர் பெருந்தகையார் சர். ஏ. எல். முதலியார் அவர்கள் தலைமை சான்ற பெரு முயற்சியால், நகரத்தின் நெருக்கடி நிறைந்த சூழ்நிலையி விருந்து நீங்கிச் சேத்துப்பட்டில் சிறப்பிடம் பெற்றது." சட்டக் கல்லூரியில் இரண்டாண்டுப் பயிற்சியை வெற்றி யுடன் முடித்த பின்னர், பிள்ளே அவர்கள், காலஞ் சென்ற வழக்கறிஞர் பெருந்தகையும், முன்னுள் சென்னை

10. "It was during the presidentship of Dr. A. Lakshmanaswami Ağudaţiar that the rew buildings at Chetput rose up in the course of 18 months as if at the touch of a magic wane, and the coilege was shifted to its new habitation. —Dr.T.M.P. Mahadevan (Pachaiyappa's College, Madras-Centenary Commemoration

Book—iB42—p. 95).