பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்...... 13?

மாநில அமைச்சருமாகிய உயர்திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்களிடம் தொழிற் பயிற்சி பெற்ருர்கள்: அதன் பின்னர் வழக்கறிஞர் தொழிலை வளம்பெற நடத்தத் தமது சொந்த ஊராகிய திருநெல்வேலிக்குச் சென்ருர்கள். அங்கே சில ஆண்டுகள் அத்தொழிலைச் சிறப்புடன் நடத்திய பிள்ளை அவர்கட்கு, அத்தொழிலி லும் பெரும்புகழ் கிட்டியது. மேலும், அந்தச் சில ஆண்டு களிலேயே அவர்கள் கூர்த்த மதியையும் ஒழுக்க உயர்வையும் நன்குனர்ந்த நெல்லை நகர மக்கள், அவரை அந்நகரின் நகராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தது மட்டுமன்றி, அப்போது அந்நகராட்சியின் முதல் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். அக்காலத்தில் இப் பதவிக்கு இருந்த சிறப்புச் சிறிதன்று இருபத்து மூன்று ஆண்டு இளைஞராயினும், பிள்ளையவர்கள், நகராட்சியில் பொறுப்பேற்ற ஒரு சில ஆண்டுகளிலேயே பொதுநலப் பணியில் ஈட்டிய புகழ் பெரிது.

மீண்டும் தமிழாசிரியர் தொழில்-அ ண் ணு ம . ப் பல்கலைக் கழகத்தில்: இந்நிலையில் வழக்கறிஞர் தொழிலில் நம் பேராசிரியர் வாழ்க்கை வளங்காண்பதினும் தமிழா சிரியர் தொழிலில் புண்ணியம் திரட்டுவதே சாலச் சிறப்புடையது என்று கருதினன் தில்லை அம்பலவன். அவன் திருவருளால் நெல்லை நீங்கித் தில்லையின் எல்லையில் அமைந்த அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராய் அமர்ந்தார் சேதுப்பிள்ளை. பேராசிரி யர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவர் தலைமையி லும், பிள்ளை அவர்கள் ஆறு ஆண்டுகள் அருந்தமிழ்ப்பணி ஆற்றினர்கள்.

11. First Municipal Vice-Chairman,