பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

நாட்டு டாக்டர்-மார் அவர்களும், பிரஞ்சு நாட்டு அருள், சீராக அவர்களும் ஆவர்.

பேராசிரியர் அவர்களது பல்கலைக் கழக வாழ்க்கை யைக் கருதும்போது தோன்றும் மிகப் பெரிய சிறப்பு, அவர்கள் தமது கால் நூற்ருண்டுக் காலத் தொண்டில் தமிழ்த் துறைக்கு மட்டுமின்றிச் சென்னைப் பல்கலைக் கழக இந்திய மொழித் துறைகள் அனைத்திற்கும் வழி காட்டியாயும் துணைவராயும் விளங்கிய திறமும், தென் குட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றின் தமிழ்த்துறை செழிக்கப் பல்லாற்ருனும் துணை புரிந்த சீர்மையுமே ஆகும். சென்னைப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன, அவர்கள் முயற்சி யாலும் துணையாலும் வெளிவந்த திராவிடப் பொதுச் சொற்கள், திராவிடப் பொதுப் பழமொழிகள் ஆகிய இரண்டுமாகும்."

இதுகாறும் குறித்த ஒரு சில குறிப்புக்களாலேயே சிற்ருசிரியர், வழக்கறிஞர், நகராட்சித் துணைத் தலைவர், விரிவுரையாளர், தலைமை விரிவுரையாளர், துணைத் தமிழ்ப் பேராசிரியர், பேராசிரியர் என்று விரிவடைந்த பிள்ளை அவர்களது வாழ்க்கை ஓயாத உழைப்பு நிறைந்த வாழ்க்கை-சலியாத தொண்டு நிறைந்த வாழ்க்கைஎன்பது இனிது புலனாகும். அடுத்துப் பண்பும் பயனும் செறிந்த அவர் தம் வாழ்வின் அழியா அடையாளங் களாய் விளங்கும் நூல்களால் தமிழ்மொழியும் தமிழ்

28. Litrić, Annals of o. R-centenary number Woł. Xłłł— part if-p. W. H.;--X

29. I. Dravidian Common Vocabulary—(1959) Published

by the Madras University

ii. Common Dravidian Proverbs 1956—pubfished by

S,乱。8。霄。