பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1&& ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பிள்ளே அவர்கள் முதல் நூல் தமிழ் மறை தந்த திரு வள்ளுவரைப் பற்றியே அமைந்தது போற்றற்குரியது. இந்நூலின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்கள், இந்நூலின் முன்னுரையில் கூறியிருக்கும் கருத்துக்கள் யாவும் பொருளுரைகளே ஆகும். பேராசிரி வர் கா. சு. பிள்ளை அவர்கள், நான்கு பக்கங்களில் திரு வள்ளுவர் நூல் நயம் என்ற புத்தகத்துள் அமைந்துள்ள ஒவ்வோர் இயலையும் ஆராய்ந்து எழுதியுள்ள முன்னுரை, முன்னுரைக்கு ஒர் இலக்கணமாகவும், திருவள்ளுவர் நூல் நயத்தின் பெருமையைப் பிறங்கச் செய்யும் பெருங் கருவியாகவும் அமைந்துள்ளமை கற்பார்க்குக் கழிபேரு வகை தரவல்லது. அம்முன்னுரையையும் நூலையும் ஒரு சேரக் கற்பார் உள்ளத்தில் நூலுக்கேற்ற முன்னுரை: முன்னுரைக்கேற்ற நூல்" என்ற கருத்தே உறுதியாகத் தோன்றும்.

முப்பது ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பெற்ற திரு வள்ளுவர் நூல் நயம் என்ற நூல், திருவள்ளுவர் பற்றிய ஆராய்ச்சிக்கே ஒரு புதுத்திருப்பத்தை அமைத்த திறத் தைப் பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களே தமது அருமையான முன்னுரையின் தொடக்கத்திலேயே குறிப் பிட்டுள்ளார்கள். அவ்வாசகம் வருமாறு:

"உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவரது அளப்பறிய மாண்பினைப் பாவலரும் நாவலரும் கற்ருேரும் மற்ருேரும் இந்நாள் வரை பொதுவகையாற் பலபடச் சீராட்டிப் பாராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப்பொருளை நுணுகி ஆய்ந்து அதன் சொற்பொருள் நயங்களை

31. திருவள்ளுவர் நூல் நயம் (1956) பக். க-சு, 32. திருவள்ளுவர் நூல் நயம், பக். க.