பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பாடுவர் கூத்தரும் பாணருமாகிய பரிசிலர். அவர்தம் கடும்பசி நீங்க உண்ண வகை செய்வான் குட்டுவன். பொன்பைரணங்கள் பலவற்றை அவர்கள் மகிழ்ந்து ஆணப் பரிசிலாக அளிப்பான். அவற்றை அழகுற அணிந்த கலைஞர் கூட்டம், நெஞ்சு மலி உவகையோடு ஆடிப் பாடும். அது போழ்து குட்டுவன் சிறிதே நறவுண்டு சிறு மகிழ்ச்சியோடு இருப்பினும், பெருவிலையினையுடைய அணிகலன்கள் பலவற்றை அகமகிழ்வோடு அள்ளி வழங்கு வான்,

  • அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்

சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து கிலம்பை தற்ற புலங்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண் மன்றம் போக்து மறுகுசிறை பாடுக் வயினி மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து கெஞ்சுமலி புவகைய ருண்டுமலிக் தாடச் சிலுகிை ழானும் பெருங்கலம் வீசும் போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!"

(பதிற்றுப்பத்து 23, 2.10)

இவ்வாறு கலைஞர் கூட்டம் களிப்புற்று ஆடவேண்டு வன புரிந்த வள்ளல் குட்டுவன் வெற்று ஈரநெஞ்சினன் அல்லன். உணர்வுவழிப்பட்ட போது ஒன்றுமறியாக் குழந்தைபோல மிக எளியணுய் அவன் இருப்பினும், அறிவுவழிப்பட்டபோது அவன் கூர்ந்த மதியையும் இணையிலா ஆற்றலையும் எவராலும் அளந்து காண வியலாது. இவ்வுண்மையைக் கெளதமனரே தம் பாடல் ஒன்றில் மிக அழகாகக் குறிப்பிடுகின்ருர், நிலமும், நீரும், நெருப்பும், காற்றும், விசும்பும் ஆகிய ஐந்தினையும்