பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

f{}: ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அவர்கள் படைத்த இலக்கியப் படைப்புகளுள் ஒளி வீகம் உயரிய பண்புகளுள் சிலவற்றை இனிக் காண்போம்.

டாக்டர் ரா. பி. சே. அவர்கள் தமிழ் உரை நடை, செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை, மறைந்த சான்ருேர் பலரும் இவ்வுண்மையை மனமாரப் போற்றியுள்ளனர். நாவலர் சோமசுந்தர பாரதியார் "தமிழர் வீரம் என்னும் நூலின் முகவுரையில் இவ்வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர்' என்றும், "திருக்காவ லூர்க் கோவில் என்னும் நூலின் தந்துரையில், அருட்டிரு நல்லூர்-சுவாமி ஞானப் பிரகாசர் செய்யுள் ஓசை ஒழுகு கின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை' என்றும் குறிப் பிட்டுள்ளமை இங்கு நினைவு கூர்தற்குரியது.

செய்யுள் நலஞ்சான்ற பேராசிரியர் அவர்கள் செந் தமிழ் உரைநடையில் கற்ருர்க்கும் மற்ருர்க்கும் களிப் பருளும் களிப்பாய் இருப்பது எதுகை மோனை இன்பமே. இந்த இன்பத்தை எழுத்து-பேச்சு-இரண்டிலுமே வாரி வழங்கும் வண்மை பேராசிரியர் அவர்கட்கு இயற்கை யாகவே வாய்த்துள்ளது." அறையில் உரையாடும் போதும், அரங்கில் முழங்கும்போதும், ஏட்டில் எழுதும் போதும், பேராசிரியர் அவர்களிடம் எதுகை மோனைகள் கெஞ்சுவதையும் கொஞ்சுவதையும் காணலாம். சான்முக அவர்கள் நூல்களின் தலைப்புக்களையும் கட்டுரைகளின் தலைப்புகளையுமே குறிக்கலாம். அவற்றுட் சில:

நூல்களின் தலைப்புக்கள் !

(1) ஊரும் பேரும் (2) வேலும் வில்லும்

39. தமிழர் வீரம் (1959), பக். i. 40. திருக்காவலுர்க் கோவில் (1952), பக்.v. 51. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (1944) பக். 212