பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......... 205

அனைத்திந்தியக் கிழக்குக்கலை மாநாட்டுச் சொற்பொழிவு களுமே" ஆகும்.

இவற்றுள் ஊரும் பேரும் என்னும் நூல், ஆயிரத்து முந்நூறுக்கு மேற்பட்ட ஊர்களின் பெயர்களை ஆராய்ந்து விளககுகிறது. இந்நூலின் தனிப்பெருஞ் சிறப்புக் குறித் துத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்களினும் நடுநின்து மதிப்பீடு செய்ய வல்லார் யார்? அவர்தம் மணிமொழி கள் வருமாறு:

"சில நாடுகளின் ஊரும் பேரும் அடங்கிய ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்து உலவுகின்றன. அத்தகைய உலா வைத் தமிழ்நாட்டிற் காண்டல் அருமையாயிருந்தது. அவ்வருமையைப் போக்கும் வாய்ப்பு அறிஞர் சேதுப்பின்னே அவர்கட்குக் கிடைத்தது தமிழ்நாட்டின் தவப்பயணுகும். தமிழ் கொழிக்கும் பொருநைக்கரையில் பிறந்து, தமிழ் பொங்கும் பொதிகைத் தென்றலில் வளர்ந்து,தமிழார்ந்த மனமொழி மெய்களைப் பெற்றுத் தமிழ் வண்ணமாய்த் தமிழ் பொழியும் ஒரு பெருங்கொண்டலிடை உதித்த மின்னெளி இந்நூல். இதைத் தமிழ் நாட்டின் தவப் பயன் என்று சாற்றலாமன்ருே?

'ஆ சி ரி ய ர், நிலம்-மலை-காடு-வயல்-ஆறுகடல்-நாடு - நகரம் - குடி-படை- குலம்-கோதே;ை-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு, இந் நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், ஆங் காங்கே பொதிந்துள்ள "குறிப்புகளும் பிறவும், தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐய மில்லை. தமிழ் நாட்டில் சில ஊர்ப்பேர்கள் சிதைந்தும் திரிந்தும் மருவியும் மாறியும் தத்தம் முதனிலையை இழந் துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்

78. இணைப்பு-ii, பார்க்க.