பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑

fü ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பாட்டுத்தொட்டு மறுமலர்ச்சிக் கவிதை ஈருக வளர்ந்து வந்துள்ள தமிழ்க் கவிதைகள் பலவற்றின் தொகுப்பு முந் நூறு பக்கங்களைக் கொண்ட களஞ்சியம்’. இரண்டாயி ரம் ஆண்டுகட்கு மேலாக வளர்ந்து வந்துள்ள தமிழ்க் கவிதைகளின் அருமை பெருமைகளை ஓதி உணர்ந்து இன் புற்றுப் பயன்பெறும் வகையில், ஆங்கில மொழிப் பேராசிரியர் பால்கிரேவ் பொற்கருவூலம்’ என்னும் பொருள் கொண்ட தலைப்போடு தொகுத்த தொகை நூல் போன்ற தொகைகள் பலவற்றைத் தொகுக்க வேண்டும் என்று, தமிழறிஞர்கள் பல காலமாகவே கருதி வந்துள்ளார்கள். அவ்வெண்ணம் பேராசிரியர் அவர்கள் தொகுத்துள்ள இத்தொகை நூல்கள் வாயி லாகச் சிறந்த முறையில் முதன்முதலாக நிறைவேறி யுள்ளது என்றே கூறவேண்டும். பேராசிரியர் அவர்கள் இந்நூல்கட்கு அளித்துள்ள நீண்ட ஆராய்ச்சிகளும், விரிவான விளக்கக் குறிப்புகளும், செவிதுகர் கனி'களின் 'செஞ்சொற்கவியின்பம் தேர்வார் சிந்தைக்குப் பெரு விருந்தாகும்.

பயன்: இனிப் பேராசிரியர் அவர்கள் கட்டுரை களால் நாட்டுக்கும் மொழிக்கும் விளைந்த பெருநலங் களுள் சிலவற்றைக் காண்போம். இந்த வகையில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது பேராசிரியர் அவர் களின் நூற்றுக்கணக்கான கட்டுரைகளால் தமிழ் மக்கள் உள்ளத்தில் பெருக்கெடுத்த தமிழார்வமே ஆகும். பேராசிரியர் அவர்கள் முப்பது ஆண்டுகட்கு முன்பு கட்டுரை எழுதத் தொடங்கிய காலத்தில் இன்றுபோலத் தமிழ் நாட்டில் தமிழார்வம் கரை புரண்டு ஒடவில்லை. நாட்டுப் பற்ருளர் கப்பலோட்டிய தமிழர்-வ. உ. சிதம்

88. புறத்திரட்டு (1938) முன்னுரை, பக், xvi.