பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

வளர்ந்து வந்துள்ளது. டாக்டர்-ஹான்சன் போன்ற வர்கள் இக்கலையில் சிறந்து விளங்கிய சீர்மையினை, பாஸ் வெல் எழுதிய ஜான்சன் வாழ்க்கை வரலாறு' எடுத் துரைக்கும். ஆல்ை, இக்கலை மேல்நாடுகளில் வளர்ந் துள்ள பான்மையில் தமிழ்நாட்டில் உண்ணும் கலங்கட்கு முன்னே ஓங்கி வளரவில்லை என்ருலும், புலவர்கட்கு இடையே இலக்கிய உரையாடல் இன்பம் புதியதன்று. இல்லையேல்,

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.’

என்னும் ஈரடியும்,

'தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகவிலர் எஃகுடையார் தம்முள் குழிஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்(து) உம்பர் உறைவார் பதி.*

என்னும் நாலடியும் பிறந்திரா அல்லவா?

பேராசிரியர் அவர்களோடு உரையாடும்போது பொழுது போவதே தெரியாது. எவ்வளவோ சுவையும் பயனு:முடைய செய்திகளையெல்லாம் கதை கதையாக அவர்கள் சொல்லுவார்கள். கதை சொல்லும் ஆற்றல் ஒரு சிலர்க்கே வாய்க்கும். எளிதாகத் தோன்றும் அக்கலை மிக அரிய ஒன்று ஆகும். அக்கலையில் வல்லவர் நம் பேராசிரியர். அவர்கள் நிகழ்ச்சிகளைச் சித்திரித்துச் சொல்லும்போது அவர்களைச் சிறந்த ஒரு சொல்லோவிய

92. Boswell’s Ltie of Johnson. 93. திருக்குறள், 394, 94. நாலடியார், கல்வி-7,