பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

உணர்வின் பயனுக, இன்னும் தமிழகம் அன்னையார் சொர்ணம்மாள் பெயரால் காணப்போகும் அறங்கள் எத்தனை எத்தனையோ!"

(ஈ)

பரிசும் பாராட்டும்

தமிழ் மொழிக்குத் தலைசிறந்த பரிசுகளையும்

பாராட்டுகளையும் பலவாக நல்கிய பேராசிரியர் அவர்

102.

103.

இவ்வறக்கட்டளைகள் சார்பில் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் இது வரை நிகழ்ந்துள்ள சொற்பொழிவுகள் பற்றிய விவரத் துக்குப் பிற்சேர்க்கை பார்க்க. (1) பேராசிரியர் தாம் வாழ்ந்த காலத்திலேயே சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 5000 கட்டட நிதிக்கு நன்கொடை வழங்கினர். அப் பள்ளியில் அவர் பெயரால் ஒர் அறை உள்ளது. இந்திய இளைஞர் கிறித்துவ சங்கத்தில் பேராசிரியர் பெயரால் ஆண்டுதோறும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரிக்கு வழங்க ஒரு சுழல் கிண்ணம் நிறுவி யுள்ள டாக்டர் சு. சங்கரராசு அவர்கள், மேற்படி பள்ளியில் பேராசிரியர் பெயரால் உள்ள அறையில் அணிசெய்யப் பேராசிரியரின் திருவுருவப் படம் ஒன்றை வழங்கி உள்ளார். இப்படம் பேராசிரியர் அவர்கள் தனி மருத்துவராய் விளங்கியவரும், பேராசிரியர் நன் கொடை வழங்கிய காலத்துப் பள்ளியின் தலைவராய் இருந்தவருமாகிய, டாக்டர் இரத்தினவேலு சுப்பிர மணியம் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது.