பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

(Tamil Culture) பேராசிரியர் அவர்கள் பெயரால் சிறப்பு மலர் வெளியிட்டுச் சீர் செய்தது,

இதுபோழ்து (1961) பேராசிரியர் அவர்கள் சென் னைப் பல்கலைக்கழ்கத்தில் கால் நூற்ருண்டுக் காலம் ஆற்றிய அருந்தமிழ்ப் பணியினைப் போற்றி எடுக்கப் பெறும் வெள்ளிவிழாவும் தனிச்சிறப்பு வாய்ந்தது அன்ருே பெருமைசான்ற எத்தனையோ துறைகளுள்ளும் வகைகளுள்ளும் முதன்மை பெற்றுவிளங்குவதுபோன்றே. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரிய ராகவும் விளங்கும் அவர்களைப் போற்றிப் பெரியதொரு பாராட்டு மலர்வெளியிட்டும்,அழகியதொரு நெய்வண்ண ஒவியப் படம் திறந்தும், அரியதோர் அறக்கட்டளை நிறுவியும், அவர்தம் அண்மை நூலாகிய ஆற்றங் கரை யினிலே என்பதை வெளியிட்டும். தமிழன்பர்கள் செய் யும் விழா' புதுவாழ்வு பெற்றிலங்கும் தமிழ்த் தாய்க்குத் தமிழ் மக்கள் எடுக்கும் தனிப்பெரு விழாவன்ருே?

106. (1) 1961 ஏப்ரல் தமிழ்ப் புத்தாண்டு நன்ளிைல், சென்னைப் பல்கலைக்கழகப் (பழைய) பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடைபெற்ற பேராசிரியர் வெள்ளி விழாப் பாராட்டுக் கூட்டத்தில், இப்படத்தை விழாத் தலைவர்-(வெள்ளிவிழாத்) துணைவேந்தர் டாக்டர் சர். ஏ. எல். முதலியார் திறந்துவைத்தார்.

{2} வெள்ளிவிழா மலரைத் தற்போது மலேசியப் பல் கலேக்கழகத்தின் இந்தியத் துறைப் பிரிவுத் தலைவராய் உள்ள, பேராசிரியர் அருட்டிரு-தனிநாய்க அடிகளார் வெளியிட்டார்.

(3) ஆற்றங்கரையினிலே நூலே, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர், பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்கள் வெளியிட்டார்.